- Home
- Gallery
- Viki Nayan : "மை டியர் பாகுபலிஸ்".. ரம்யா கிருஷ்ணனாக மாறிய விக்னேஷ் சிவன் - தந்தையர் தின Special பிக்ஸ் இதோ!
Viki Nayan : "மை டியர் பாகுபலிஸ்".. ரம்யா கிருஷ்ணனாக மாறிய விக்னேஷ் சிவன் - தந்தையர் தின Special பிக்ஸ் இதோ!
Vignesh Shivan : இன்று தந்தையர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், விக்னேஷ் சிவன் தனது மகன்களோடு சிறப்பான ஒரு போட்டோஷூட் எடுத்துள்ளார்.

Vignesh
கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான "நானும் ரௌடி தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருடைய காதல் மலர்ந்தது.
Uyir
சுமார் ஏழு ஆண்டுகள் நீடித்த இந்த காதல், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் வந்து முடிந்தது. இந்த தம்பதியருக்கு வாடகை தாய் மூலம் அழகான இரு ஆண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய பெயர் உயிர் மற்றும் உலகு ஆகும்.
Ulag
இந்நிலையில் இந்த கோடை விடுமுறையை அனுபவிக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நிலையில் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு ரம்யா கிருஷ்ணனை போல தண்ணீருக்கு அடியில் நின்று கொண்டு, தனது மகன்களை நீருக்கு மேல் உயர்த்தி பிடித்து, அவர்களை பாகுபலியாக எண்ணி போட்டோஷூட் எடுத்திருக்கிறார் விக்கி.