- Home
- Gallery
- Charle Son Wedding: நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
Charle Son Wedding: நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
பிரபல நடிகர் சார்லி மகன் அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

charlie
தமிழ் சினிமாவில், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர் சார்லி. கோவில்பட்டியை சேர்ந்த இவர், தனது கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் உள்ள ஜி.வி.என் கல்லூரியில் முடித்தார். நடிகர் சிவாஜி கணேசன், ஆர். முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற நடிகர்களின் தீவிர பக்தரான இவர், அதிகம் படித்திருந்தாலும், அரசு உத்யோகமே கிடைத்த போதிலும் நடிகனாக தான் ஆவேன் என பிடிவாதமாக இருந்தவர்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் ஒரு பணியாளர் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சார்லி, ஆறு ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தினார். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வழக்கில் வந்தது.
அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
நடிகர் விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானவரும் இவர் தான்.
தற்போது அருமைப்பட்டி சக்திவேல், ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1, ரூபன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரை பற்றி ரசிகர்களுக்கு தெரிந்த அளவுக்கு இவருடைய குடும்பத்தினர் பற்றி தெரியாது. இவரின் மகள், மகன்கள் என அனைவருமே படித்து தற்போது பெரிய உத்தியோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சார்லி அவர்களின் மகன் அஜய்தங்கசாமி - பெர்மிசியாடெமி தம்பதிக்கு நேற்று திருமண வரவேற்பு மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இதில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் திரு பூச்சி எஸ்.முருகன் அவர்கள் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.