Amala Paul Baby: வாவ்.. நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! வித்தியாசமான பெயரோடு... வெளியிட்ட போட்டோஸ்!
நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்த தகவலை, தற்போது அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் குழந்தையின் பெயரோடு அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோஸ் மற்றும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த போதிலும்... இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய வைத்ததோடு, மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.
இதைத்தொடர்ந்து வளரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்த அமலாபால், தன்னுடைய அடுத்தடுத்த படங்களில், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, போன்ற இளம் நடிகர்களின் படத்திலும், பின்னர் நடிகர் விஜய், விக்ரம், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.
சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும்போதே, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான அமலாபால், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியது ஏ.எல்.விஜய் குடும்பத்தினருக்கும், அமலா பாலுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியது.
ஒரு கட்டத்தில் விஜய் மற்றும் அமலாபால் இருவருமே சமரசமாக பேசிக்கொண்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அமலா பாலை பிரிந்த ஒரே வருடத்தில் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் இவருக்கும் மார்க்கெட் சரிய... மிகுந்த மன அழுத்தத்திற்கு அமலாபால் ஆளானதாக கூறப்பட்டது.
இதில் இருந்து வெளியே வர, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மலை ஏறுதல் மற்றும் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஆடை போன்ற படங்களிலும் மிகவும் துணிச்சலான வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், திருமணமான 2 மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். பின்னரே அமலா பாலின் அவசர அவசரமான திருமணத்திற்கு காரணம் அவருடைய கர்ப்பம் என்பது தெரிய வந்தது. தன்னுடைய கர்ப்ப காலத்தை கணவருடன் கொண்டாடி வந்த அமலா பால், அவ்வபோது போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமலா பாலுக்கு, ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் இருவரும் சற்று முன் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். தங்களின் குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக இலை (ILAI) என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட அது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.