- Home
- Gallery
- Sneha Son Workout: ஒர்க்கவுட்டில் சினேகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரின் மகன் விஹான்! வைரலாகும் புகைப்படம்!
Sneha Son Workout: ஒர்க்கவுட்டில் சினேகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரின் மகன் விஹான்! வைரலாகும் புகைப்படம்!
நடிகை சினேகா, தன்னுடைய மகன் விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Actress Sneha
தமிழ் சினிமாவை எத்தனையோ நடிகைகள் வந்து அலங்கரித்தால், ஒரு சில நடிகைகளுக்கு இருக்கும் மவுசு எப்போதுமே குறைவதில்லை. அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் சினேகா. 42 வயதிலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கூட யங் லுக்கில் நடிகை சினேகா இருக்க காரணம், அவரது ஒர்க் அவுட் மற்றும் டயட் தான். இதனை பல முறை அவரே, தன்னுடைய பேட்டிகளில் கூறி உள்ளார்.
GOAT Update
நடிகை சினேகா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'GOAT ' படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு கிடைத்த போது, நடிக்க முடியாது என அந்த வாய்ப்பை மறுத்தார். ஒருவேளை அண்ணியாக நடிக்கும் வாய்ப்பை சினேகா அன்று ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று தளபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி இருப்பார். அன்று வந்த வாய்ப்பை நிராகரித்தது தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.
திருமணத்திற்கு பின்னர் தான் நடிக்கும் வேடங்களில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கும் நடிகை சினேகா, சின்னத்திரையிலும் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். அதே போல் தற்போது இவர் நிர்வகித்து வரும், சினேகாலையா கடைக்கு சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
தன்னுடைய பணிகளில் பிசியாக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் சினேகா, சமீபத்தில் கூட... குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்று வந்தார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட படு வைரலானது.
இந்நிலையில், தற்போது நடிகை சினேகா, தன்னுடைய மகனுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்மாவுக்கே ஃடப் கொடுக்கும் விதத்தில் ஒர்க்கவுட் செய்யும் விஹானை பார்த்து ரசிகர்கள் தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.