- Home
- Gallery
- வாவ்.. பொங்கி வழியும் காதல்! பார்வையில் ரொமான்ஸ் செய்த ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி! வைரலாகும் போட்டோஸ்!
வாவ்.. பொங்கி வழியும் காதல்! பார்வையில் ரொமான்ஸ் செய்த ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி! வைரலாகும் போட்டோஸ்!
உமாபதி ராமய்யா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் இருவரும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுத்து கொண்ட, ரொமான்டிக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கன்னட திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து, கோலிவுட் நடிகராகவே மாறியவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் நடித்த ஜென்டில் மேன், முதல்வன், ஜெய் ஹிந்த், ஏழுமலை போன்ற ஆக்ஷன் அதிரடி படங்கள் பல ரசிகர்களின் ஃபேவரட் படங்களாகும்.
அர்ஜுனை தொடர்ந்து இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டது யானை' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், ஐஸ்வர்யாவை வைத்து அர்ஜுன் படம் ஒன்றை இயக்கி தயாரித்தார். அந்த படமும் படுத்து விட்டதால், ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகி, அப்பாவின் பிஸ்னஸை கவனித்து வந்தார்.
30 வயதை கடந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த ஆண்டு காமெடி நடிகர் தப்பி ராமய்யாவின் மகன், உமாபதியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர்களின் காதல் விவகாரம் வெளியான உடனேயே இந்த தகவலை உறுதி செய்த தம்பி ராமையா, கூடிய விரைவில் திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவித்தார்.
அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜுன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 10-ஆம் தேதி, இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இதை தொடர்ந்து ஜூன் 15 இவர்களின் திருமண ரிசப்ஷன் நடந்து முடிந்தது.
ஏராளமான பிரபலங்கள் இவர்களின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில்... திருமண ரிசப்ஷனில் போது, ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் ரொமான்டிக்காக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.