சினிமாவை மிஞ்சிய உமாபதி - ஐஸ்வர்யா ஜோடி! வெட்டிங் ரிசப்ஷனில் பட்டைய கிளப்பிய டான்ஸ்.. வைரல் போட்டோஸ்!
Actress Aishwarya Arjun : பிரபல நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் உமாபதி ராமையாவை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார். பலரும் இந்த ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Umapathy
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் முன்னணி இயக்குனரும், நடிகருமான அர்ஜுன் அவர்களுடைய மூத்த மகள் தான் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Umapathy ramaiah
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனனுக்கும், பிரபல நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி ராமய்யாவிற்கும் திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்தது.
aishwarya
இதனையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி உமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகிய இருவரின் திருமணம் வெகு ஜோராக நடந்து முடிந்தது.
aishwarya arjun
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றனர். தற்பொழுது மணமக்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
aishwarya arjun wedding
உமாபதி இராமையா அண்மையில் தனது தந்தை தம்பி இராமையா அவர்களோடு இணைந்து நடித்த ஒரு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Aishwarya Arjun Photos
கடந்த 2017ம் ஆண்டு தமிழில் வெளியான "அதாகப்பட்டது மகா ஜனங்களே" என்ற படத்தின் மூலம் தனது கலையுலக பயணயத்தை தொடங்கினர் உமாபதி ராமையா.