MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அலப்பறையே இல்லாமல் நடிகர் கார்த்தி செய்யும் அரும்பணி.. 500 நாட்களை கடந்து அசத்தி வரும் ரசிகர்கள்..

அலப்பறையே இல்லாமல் நடிகர் கார்த்தி செய்யும் அரும்பணி.. 500 நாட்களை கடந்து அசத்தி வரும் ரசிகர்கள்..

நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக மலிவு விலையில் சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : Ramya s
Published : Feb 19 2024, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
karthi

karthi

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

 

28

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் 1, சர்தார், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

38

கடைசியாக அவர் ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். பொதுவாக நடிகர்களின் ரசிகர்கள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

48

அந்த வகையில் நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக மலிவு விலையில் சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50 மதிப்புள்ள சுவையான வெஜிடபிள் பிரியாணி ரூ.10-க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

58

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

68

சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக போதிய இட வசதி இல்லாததால் இந்த உணவகம் செயல்பட முடியாமல் இருந்து வந்த இந்த உணவகம் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை இங்கு உணவு வழங்கப்படுகிறது.

78

லாப நோக்கம் இன்றி மக்கள் சேவையாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் தொடங்கி நேற்றுடன் 500 நாட்கள் முடிவடைந்துள்ளது. 

 

88

டெலிவரி செய்யும் நபர்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்த உணவகம் பசியாற்றி வருகிறது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved