என் அண்ணன் குடியால சாகல! நடந்தது இது தான்... 10 வருஷத்துக்கு பின் நடிகர் மணிவண்ணன் தங்கை கூறிய ஷாக் தகவல்!
இயக்குனரும் - நடிகருமான மணிவண்ணனின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி, அவருடைய சகோதரி பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் திரைப்பட நடிகரும் - இயக்குனருமான மணிவண்ணன். மணிவண்ணன் தன்னுடைய சொந்த ஊரான சூலூரில் உள்ள அரசு சிறுவர் உயர்நிலைப்பள்ளி பள்ளியில் தன்னுடைய ஆரம்பகால பள்ளி படிப்பை முடித்து பின்னர், அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்தார். தன்னுடைய மேல்படிப்பாக MA ஆங்கிலத்தை தேர்வு செய்தார். இவர் இந்த படிப்பை தேர்வு செய்ய காரணம் அவரின் நண்பரும் நடிகருமான சத்யராஜ் என கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே தமிழ் வழி கல்வி பயின்று வந்ததால், ஆங்கில படிப்பை படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். ஒருமுறை மேடையில் ஏறி ஷேக்ஸ் பியர் நாடகத்தில் நடித்த போது, இவருடைய உச்சரிப்பு சரியாக இல்லாததால் மற்ற மாணவர்களால் கிண்டல் அடிக்க பட்டார். இதனால் பாதியிலேயே தன்னுடைய மேல் படிப்பை நிறுத்தியவர், எதேர்சையாக இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தை பார்த்துவிட்டு, அவருக்கு எழுதிய நூறு பக்க கடிதம் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
மணிவண்ணனின் ஆர்வத்தை பார்த்து வியந்த பாரதிராஜா, தன்னுடைய உதவி இயக்குனராக அவரை ஏற்றுக் கொண்டார். அதன்படி 1980 களில் இருந்து 1982 வரை பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு கதை, வசனம் , திரைக்கதை எழுதினார் மணிவண்ணன். இதில் இவர் திரைக்கதை எழுதிய நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இரண்டே ஆண்டுகளில் சிறந்த உதவி இயக்குனராக உருவெடுத்தது மட்டும் இன்றி, 1982 ஆம் ஆண்டு இயக்குனராகவும் மாறினார். மேலும் இவர் இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை, வீட்டில் ராமன் வெளியில கிருஷ்ணன், ஜோதி, இளமைக்காலம், நூறாவது நாள், 24 மணி நேரம், அன்பின் முகவரி, சின்னத்தம்பி பெரியதம்பி காதல், காதல் ஓய்வதில்லை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
திரைப்படம் இயக்குவதை தாண்டி கொடி பறக்குது, திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். இதைத் தொடர்ந்து இவர் நடித்த அமைதிப்படை, கோகுலத்தில் சீதை, காதில் கோட்டை, அவ்வை சண்முகி, கடவுள், உள்ளிட்ட பல படங்களில் இவருடைய கதாபாத்திரம் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. இவருடைய நேர்த்தியான நடிப்பை இன்றுவரை ரசிக்கும் பல ரசிகர்கள் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஒரு கட்டத்தில் முழுமையாக திரைப்படம் இயக்குவதை விட்டுவிட்டு, முழு நேர நடிகராகவும் மாறினார் மணிவண்ணன். அரசியல் கருத்துக்களையும் அசால்ட்டாக தன்னுடைய திரைப்படங்களில் வைத்து, மக்களை சென்றடைய செய்த மகா கவிஞன் மணிவண்ணன். இவர் நடிக்கும் பல படங்களில் இவரின் கோயபுத்தூர் குசும்பும் கூடவே இருப்பது மிகப்பெரிய ஹை லைட் எனலாம்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக இவர் உயிரிழந்த நிலையில், இவரின் மரணத்திற்கு காரணம் இவர் அதிகமாக குடித்ததால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டது. இதற்கு இவருடைய சகோதரி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மணிவண்ணனின் சகோதரி பேட்டியில் கூறியுள்ளதாவது...
என்னுடைய அண்ணன் எனக்கு ஒரு அண்ணனாக மட்டுமல்லாமல் அம்மா - அப்பாவாகவும் இருந்து என்னை பார்த்துக் கொண்டார். அவர் இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது. நான் என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதனை வாங்கி கொடுத்து விடுவார். அண்ணியும் அப்படிதான் என்னை பார்த்துக் கொண்டார். அவரும் என்னை ஒரு மகள் போல தான் பார்த்தார். அண்ணன் இறப்பு குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. அவர் குடியால் தான் இறந்துவிட்டார் என பல செய்திகள் உலா வருகின்றன. உண்மையில் அவர் குடியால் இறக்கவில்லை. அண்ணன் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே குடியை நிறுத்திவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எங்கள் அம்மா இறந்த துக்கத்தின் போது கூட அண்ணன் மீண்டும் குடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தன்னுடைய அண்ணிக்கு புற்றுநோய் இருந்தது அண்ணனுக்கு தெரியவந்தது. இதனை மருத்துவர்கள் அண்ணனிடம் மட்டும் தான் அப்போது கூறினார்கள். கடைசி கட்டத்தில் அண்ணி இருந்ததால், அவரை காப்பாற்றுவது கடினம் என கூறிவிட்டனர். இந்த துக்கத்தை மனதில் வைத்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் புதைத்துக் கொண்டு, தனக்குள்ளியே உருகினார்.
மேலும் கடைசியாக அவர் பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியின் போது... கால் இடறி கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டது. இதனால் சுமார் இரண்டு மாதங்கள் வரை அவர் உடல் நலமின்றி இருந்தார். இதன் பின்னரே அவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். தன்னுடைய அண்ணன் இறந்த சில மாதங்களிலேயே, தன்னுடைய அண்ணியும் இறந்து விட்டதாக மணிவண்ணனின் சகோதரி தெரிவித்துள்ளார். சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர் மணிவண்ணனின் தங்கை கொடுத்துள்ள பேட்டி, சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.