ட்ராமானு சொல்லி சீப்பா பேசுறது வலிக்குது! ஆதங்கப்பட்ட விசித்ரா.. அசிங்கப்படுத்தி அனுப்பிய பூர்ணிமா - மாயா !
இன்று சீக்ரெட் டாஸ்க் மூலம், விஷ்ணு மற்றும் தினேஷ் இடையே சண்டையை மூட்டி விட்டார் பிக்பாஸ் என்பதை பார்த்தோம். இதை தொடர்ந்து மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வரை, பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்த விஷயம் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது. மாயாவின் புல்லி கேங் பிரதீபுக்கு எதிராக நின்ற நிலையில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் பிரதீபுக்கு சப்போர்ட் செய்து விளையாடினர்.
மேலும் பிரதீப் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்வுகளுக்கு, காரணம் சொல்லியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் காரணமாக, மழுப்பி பதில் கூறிய கமல்... பல உண்மைகளை மறைத்தார். மேலும் மாயா - பூர்ணிமாவை விஷயத்தையும் பெரிதாக கண்டு கொள்ளாமல் பேசியது போலவே தெரிந்தது. இதனால் பலர் மாயாவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு சுதந்திரம் கமல் கொடுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் இடையே பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லாததால், வேண்டும் என்றே இந்த வார கேப்டனுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்து, பெரிய பிரச்சனை தெறிக்க விட்டார். இந்த பிரச்சனையால் பிக்பாஸ் வீடு, எரிவதை முதல் இரண்டு புரோமோவில் பார்த்தோம்.
இதை தொடர்ந்து மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் விசித்ரா "நா அம்மாவா நடிக்கல, அப்படி நடிக்க முடியாது. எனக்கு விக்ரமை பார்த்தால் என் பையன் போல் இருக்கு. ஆனால் நா ட்ராமா பண்ணுறேன்னு, பொய் சொல்றேன்னு சொல்லி ரொம்ப சீப்பா சொல்றீங்க அது எனக்கு ரொம்ப வலிக்குது. என்ன விசித்ரா மேம்னு கூப்பிடுங்க... அதுக்கான தகுதி எனக்கு இருக்கிறது என கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் விசித்ரா, இதே 50 வயசுல, எத்தனையோ பேர் எந்த உதவியும் இல்லாம இருக்காங்க... இப்போ நான் விட்டு கொடுத்தால் இதுவே ஒரு தப்பான எடுத்து காட்டாக வெளியே போகும் என சொல்கிறார். அவர் பேசி முடிப்பதற்குள் துறுதுறுவென கையை உயர்த்தி பூர்ணிமா விசித்ரா மேம், இனிமே நீங்களும் என்னை பூர்ணிமா மேடம்னு கூப்பிடுங்க என சொல்ல, மாயாவும் ஜால்றா தட்டுவது போல் நீங்கள் என்னையும் மேடம்னு கூப்பிடுங்கள் என்கிறார். ஒரு பெண்ணின் எமோஷனை கூட புரிந்து கொள்ளாமல், விச்சுவை அசிங்கப்படுத்துவது போல் பூர்ணிமா - மாயா நடந்து கொண்டதற்கு பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D