Tamannaah Marriage: விரைவில் திருமணம்.! திரையுலகை விட்டு விலகும் தமன்னா? கல்யாணம் குறித்து ஓப்பன் டாக்.!
நடிகை தமன்னா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வரும் நிலையில், விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமண குறித்து தமன்னா பேசிய பழைய தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நயன்தாரா - த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக சுமார் 18 வருடங்களுக்கு மேலாக, ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நடிகை தமன்னா. கடந்த 2005 ஆம் ஆண்டு 'கேடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த கல்லூரி திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த 'படிக்காதவன்' திரைப்படம் இவரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், விஜய், அஜித், சூர்யா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. அதே போல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஃபேமஸ் ஆனார்.
ஒரு கட்டத்தில் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. அந்த சமயத்தில் தான் தமன்னா பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த 'பாகுபலி' திரைப்படம் வெளியாகி இவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நயன்தாரா பாணியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தார்.
திரைப்படங்களை தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரி 2 வெப் தொடரில் நடித்த போது, நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க துவங்கினார். இதை தொடர்ந்து இவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்... தமன்னா திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு முழுமையாக விலகி விடுவாரோ என்கிற சந்தேகத்தை எழுப்பி உள்ளது, இவர் சமீபத்திய பேட்டியில் பேசி இருந்த பேச்சு.
இந்த பேட்டியில் அவர் பேசி இருந்தாவது, "நான் நடிக்க வந்த புதிதில், பத்து வருடங்கள் சினிமாவில் நடித்தால் போதும் என்ற மனநிலையுடன் தான் இருந்தேன். எப்படியும் 30 வயதில் எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் என நினைத்தேன். ஆனால் தற்போது 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றேன்.
Tamannaah Bhathia Dating
திருமணம் செய்ய சில பொறுப்புகள் தேவை. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே நான் எப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கின்றேன் என உணர்கிறேனோ அப்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருந்தார். தற்போது தமன்னாவுக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலை வந்து விட்டதால், திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகி, குழந்தை, குடும்பம் என செட்டில் ஆவார் என கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D