MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அப்பவே கோடிகளில் சம்பளம்.. பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை இவங்க தான்..

அப்பவே கோடிகளில் சம்பளம்.. பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை இவங்க தான்..

தமிழ் திரையுலகில் முதன் முதலில் பிரைவேட் ஜெட் விமானம் வைத்திருந்த நடிகை யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : May 09 2024, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான பங்களாக்கள் முதல் தனியார் ஜெட் விமானங்கள் வரை, பிரபலங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி, பிரைவேட் ஜெட், சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தனியார் ஜெட் விமானம் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை யார் தெரியுமா? அது வேறு யாருமல்ல நடிகை கே.ஆர்.விஜயா தான். 70 மற்றும் 80 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். 70களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை என்றால் அது கே.ஆர். விஜயா தான். 

37

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். கே.ஆர்.விஜயா 1963 இல் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் பிரபலமான முகமாக இருந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்..

47

1963 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் கற்பகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார். சமீபத்தில் 75 வயதை எட்டிய கே.ஆர்.விஜயா கடைசியாக 2023ல் வெளியான விஷனகுடி படத்தில் நடித்தார்.

57

புன்னகை அரசி, தெய்வநாயகி என பல பெயர்களால் அழைக்கப்பட்ட, கே.ஆர்.விஜயா, 70, 80களில் இயக்குனர்களின் முதல் தேர்வாக இருந்தார். அவரின் கால்ஷீட்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். 70களில் அம்மன் கதாப்பாத்திரம் என்றால் அதில் கண்டிப்பாக கே.ஆர். விஜயா தான் நடிப்பார். திரைப்படங்கள் தவிர, அவர் இந்தியா மற்றும் இலங்கையில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி மற்றும் குடும்பம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 500 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

 

67

இந்த நிலையில் கே.ஆர்.விஜயாவின் தங்கையும், நடிகையுமான கே.ஆர். வத்சலா பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் பேசிய அவர் “ கே.ஆர். விஜயாவிடம் பிரைவேட் ஜெட் இருந்தது.

77
KR Vijaya

KR Vijaya

இதுதவிர 4 கப்பல்கள் இருந்தன. அவர் சில நேரங்களில் விமானத்தில் தான் படப்பிடிப்புக்கு வருவார். ஆனால் இந்த சொத்துக்கள் இருப்பதால் அவருக்கு எந்த கர்வமும் இருந்ததில்லை” என்று கூறினார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved