MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... வீடு தேடி வந்த வாய்ப்பை நிராகரித்த சாய் பல்லவி

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... வீடு தேடி வந்த வாய்ப்பை நிராகரித்த சாய் பல்லவி

2 கோடி சம்பளம் தருவதாக கூறியும் நடிகை சாய் பல்லவி பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்ததன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 09 2024, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sai pallavi

sai pallavi

விளம்பரங்களில் நடிக்கும் சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர். அழகு சாதனை பொருட்கள், குளிர்பானங்கள் தொடங்கி புகையிலை வரை அனைத்து வகையான விளம்பரங்களிலும் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து கல்லாகட்டி வருகின்றனர். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களாக இருந்தாலும் கோடிக்கணக்கில் காசை வாரி இறைத்தால் அதில் நடிக்க பல நடிகர் நடிகைகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
sai pallavi rejected Ad

sai pallavi rejected Ad

காசுக்காக நடிக்கும் நடிகர்கள்

சுத்த சைவமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட அசைவ உணவுகளை புரமோட் செய்யும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். இவை அனைத்திற்கும் முதன்மையாக இருப்பது காசு தான். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை விளம்பரத்தில் பாலிவுட் நடிகர்கள் பலர் போட்டி போட்டு நடிக்கின்றனர். அவர்களைப் பார்த்து அவர்களது ரசிகர்களும் அதை வாங்கி உட்கொள்கின்றனர். இதுபோன்ற நடிகர்களுக்கு மத்தியில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்யமாட்டேன் என்று தீர்க்கமாக இருக்கும் நடிகர், நடிகைகளும் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... மலர் டீச்சராக அறிமுகமாகி கோலிவுட்டின் ரெளடி பேபியாக கலக்கி வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

34
sai pallavi refuse to act in Fairness Cream Ad

sai pallavi refuse to act in Fairness Cream Ad

விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

அவர்களில் ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி. இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு முன்னணி அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்கள் கம்பெனி விளம்பரத்தில் நடிக்க வருமாறு அணுகி இருக்கிறது. அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு ரூ.2 கோடி சம்பளம் தருவதாகவும் கூறி அவர்கள் டீல் பேசி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் செவி சாய்க்காத சாய் பல்லவி, நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டாராம்.

44
Sai pallavi Birthday

Sai pallavi Birthday

மேக்கப்பை விரும்பாத சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி சினிமாவிலும், ரியல் லைஃபிலும் மேக்கப் போடாமல் இயல்பான தோற்றத்தில் இருப்பதை விரும்புபவர் ஆவார். அதுமட்டுமின்றி அவர் மருத்துவர் என்பதால் அழகு சாதன பொருட்களால் சருமத்துக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். அதனால் தான் அழகுசாதன நிறுவனம் விளம்பரத்தில் நடிக்க அணுகியபோது மேக்கப்பே போடாத நான் அது சம்பந்தமான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அப்பவே கோடிகளில் சம்பளம்.. பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை இவங்க தான்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாய் பல்லவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved