ரக்ஷிதா மகாலட்சுமி முதல் சரவணன் விக்ரம் வரை.. ஆடம்பர சொகுசு கார் வைத்திருக்கும் தொலைக்காட்சி பிரபலங்கள்!
திரைப்பட பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை பிரபலங்களுக்கும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவர்களும் திரைபிரபலங்களுக்கு நிகராக சொகுசு கார்கள் வைத்துள்ளனர். அப்படி சொந்தமாக சொகுசு கார் வைத்திருக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Manimegalai
சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம், தொகுப்பாளராக அறியப்பட்ட மணிமேகலை, அதை தொடர்ந்து டான்ஸரான ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோ மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இந்த ஜோடி, பின்னர் விஜய் டிவி மெட்டீரியலாகவே மாறி விட்டனர். தனக்கென யூ டியூப் ஒன்றை துவங்கி அதன் மூலம் பல லட்சம் சம்பாதித்து வரும் இந்த ஜோடி, பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி போன்ற சொகுசு கார்கள் வைத்துள்ளனர். இந்த கார்களின் விலை
விலை 55 லட்சத்திற்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
Saranya
சின்னத்திரை சீரியல் நடிகையான சரண்யா, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற கார் வைத்திருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 78 லட்சத்திற்கும் அதிகம். அது மட்டும் இன்றி பிஎம்டபிள்யூ பைக்கும் இவரிடம் உள்ளது என்றும் இந்த பைக்கின் விலை மூன்று லட்சத்திற்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Saravanan Vikram:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டில் வெல்லும் கனவில், கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும்... பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சரவண விக்ரம் சமீபத்தில் தான் தனக்கென ஒரு சொகுசு காரை வாங்கினார்.
Shivani Narayanan
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். அதில் இவரின் ஃபேவரட் என்றால் பிஎம்டபிள்யு 7 சிரிஸ் கார் என கூறப்படுகிறது. சமீபத்தில் வாங்கப்பட்ட இந்த கார் 1.2 கோடி என கூறப்படுகிறது.
Vanitha Vijayakumar: சிரிச்சது குத்தமா? தொகுப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட வனிதா.! வைரலாகும் வீடியோ!
Balaji Murugadoss
இவரை தொடர்ந்து, ஷிவானியின் நண்பரான பாலாஜி முருகதாஸும் பிஎம்டபிள்யு 7 சிரிஸ் சொகுசு காரை தான் வைத்துள்ளார். இதன் விளையும் 1 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
Sanjeev and Alya manasa
அதே போல் ராஜா ராணி என்ற சீரியலில் மூலம் காதல் ஜோடியாக மாறி தற்போது அன்யோன்னியமான கணவன் - மனைவியாக வாழ்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானாசா இருவருமே, தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு BMW சீரிஸில் மூன்று சொகுசு கார் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Sunitha Gogi
ஒரு டான்சராக அறியப்பட்டு, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமான சுனிதா சமீபத்தில் தான் தன்னுடைய கனவு கார் ஒன்றை வாங்கினார். இந்த சொகுசு காரின் விலை 50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
Reshma Ashok
டான்சர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகை என பன்முக திறமையாளரான ரேஷ்மா அசோக்... பல கார்கள் வைத்துள்ளார். சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த சொகுசு கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது.
Rachitha Mahalakshmi
அதேபோல் நடிகையும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 புகழ் ரசிதா மகாலட்சுமியும், ஏற்கனவே பல கார்கள் வைத்திருந்தாலும், சமீபத்தில்... மோரிஸ் கரேஜ் என்கிற புதிய கார் ஒன்றையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.