800 OTT Release: விஜய் சேதுபதி விலகிய முரளிதரன் பயோபிக்! '800' திரைப்படத்தை ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம்!
இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் சுழற் பந்துவீச்சாளர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படம் ஓடிடியில் இலவசமாக வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் அசைத்து பார்க்க முடியாத பவுலராக இருந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் இவர் ஆவர். ஒரு அகதியாக இருந்து, பின்னர் கிரிக்கெட் மூலம் பல சாதனைகளை படைத்தார். இவரை சுற்றி வந்த சர்ச்சைகளும் ஏராளம்.
இந்நிலையில் இவர் கடந்து வந்த பாதைகளை பலரும் அறியும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் '800'. முதலில் இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், பின்னர் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இதையடுத்து பாலிவுட் நடிகர் மாதூர் மிட்டல் என்பவரை ஹீரோவாக நடிக்க வைத்து அப்படத்தை எடுத்து முடித்துள்ளனர். எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாசர், வேலராமமூர்த்தி உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் கடந்த மாதம், அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை ஜியோ சினிமாவில் டிசம்பர் 2ஆம் தேதி முதல், ஜியோ ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.