மருமகளை அழைக்க வந்த பாக்கியா! அம்மாவுடன் சேர்ந்து அசிங்கப்படுத்தி அனுப்பிய ஜெனி! 'பாக்கிய லட்சுமி' அப்டேட்!
செழியன் செய்த தவறால் தற்போது ஜெனி அவரை விட்டு விலகி இருக்கும் நிலையில், பாக்கிய யாவை அவர் அழைக்க வந்தபோது அசிங்கப்படுத்தி வெளியேற்றப்படுகிறார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
எப்படியும் செழியனை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மாலினி திட்டம் போட்ட நிலையில், குழந்தை பிறந்து விட்டதால் ஒரேயடியாக இனி பிரிந்து விடலாம், இதெல்லாம் தனக்கு சரியா படவில்லை என மாலினியிடம் கூறுகிறார் செழியன். இதனை ஏற்று கொள்ள முடியாத மாலினி பல வகையில், செழியனுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரபிக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நட்பையும் தாண்டிய ஒரு உறவு உள்ளதை அறிந்து கொள்ளும் பாக்கியா , செழியன் போனை எடுத்து அலசி ஆராய்ந்ததில், அவருக்கு பல அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. பத்தும் பத்தாததற்கு மாலினி, சில வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி பிரச்னையை பெரிதாக்குகிறார்.
இதை தொடர்ந்து மாலினியை, கோவிலில் பார்க்கும் பாக்கிய லட்சுமி ஜெனி மற்றும் குழந்தை பற்றி எடுத்து கூறி, இதோடு உங்களுடைய உறவை முறித்து கொள்ளுங்கள். உன் பக்கம் இனி செழியன் திரும்பி பார்க்க நான் மாட்டான் அதே போல் நீயும் இனி அவனை டிஸ்டப் பண்ண கூடாது என சொல்கிறார். அப்போதைக்கு மிகவும் ஆவேசமாக பேசி கொண்டு வெளியே சொல்லும் மாலினி பின்னர் மீண்டும் வீட்டுக்கே வந்து செழியன் பற்றிய உண்மைகளை அனைவர் முன்பும் உடைத்து கூறுகிறார்.
ஜெனியிடம் இதற்கான ஆதாரத்தையும் காண்பிக்கிறார். பல பொய்களை வாரி இறைந்து, இந்த சம்பவம் என்றானே பாக்கியாவுக்க்கு தெரியும் என கூறுவதால், மிகப்பெரிய பிரச்சனையே வெடிக்கிறது. அனைவருமே ஏன் முதலில் இதை கூறவில்லை என பாக்கியாவை திட்டி தீர்க்கின்றனர். ராதிகா தான் பாக்கியாவுக்கு ஆறுதலாக இருக்கிறார்.
இதை தொடர்ந்து செழியன் பல முறை குழந்தையை பார்க்க சென்றபோதும், அவர் விரட்டியடிக் படுவதால், பாக்கியா தன்னுடைய மருமகளை அழைக்க வீட்டுக்கு செல்கிறார், அப்போது ஜெனியியின் அம்மா , "நம்பி தானே உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தோம் இப்படி பண்ணிட்டானே என கத்துக்குகிறார். பின்னர் ஜெனியிடம் பாக்கியா பேச, நீக்க பேசாதீங்க நீங்களும் என்னோடைய பிரச்சினையில்ல இருந்துருக்கீங்க, ஒதுக்கி தானே வாழறீங்க. உங்களுக்கு வந்த பிரச்சனை எனக்கு வந்தா ஒன்னும் இல்லையா? எப்படி ஒரே வீட்டில் வாழ முடியும் என பேசி அவரை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதுகுறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D