Rajinikanth: ஜிகர்தண்டா xx படம் ஒரு குறிஞ்சி மலர்! அறிக்கை வெளியிட்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம், ஜப்பானை வீழ்த்தி வெற்றி கண்டுள்ள நிலையில், இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, தீபாவளிக்கு, விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்தபடியாக உள்ள கார்த்தி, ராகவா லாரன்ஸ், மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் நடித்த ஜப்பான், ஜிகர்தண்டா XX மற்றும் ரெய்டு ஆகிய படங்கள் வெளியானது. மேலும் காளிவெங்கட் நடிப்பில் பல விருதுகளை வாங்கி குவித்த 'கிடா' திரைப்படமும் வெளியானது.
ஜிகர்தண்டா மற்றும் ஜப்பான் வருகையால், கிடா மற்றும் ரெய்டு ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் கண்டுகொள்ளாமல் போனது. குறிப்பாக கிடா போன்ற படங்கள் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே வெளியானாலும், பெரிய படங்களை பார்க்க படையெடுத்த ரசிகர்கள் இப்படத்தை பார்க்க வரவில்லை என கூறப்பட்டது. அதே போல் கார்த்தியின் 25-ஆவது படமாக வெளியான ஜப்பான் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், படு தோல்வியை சந்தித்தது.
ஆனால் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா XX தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் மாற்றும் பிரபலங்கள் பலர் இப்படத்தை பார்த்து, விஜயர்ந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜிகர்தண்டா xx படக்குழுவினரை அறிக்கை வெளியிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது "ஜிகர்தண்டா xx படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜ் அற்புதமான படைப்பு வித்தியாசமான கதை மற்றும் கதைகளம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ் ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம் நகைச்சுவை குன சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.
Jigarthanda
திருவோடை கேமரா விளையாடி இருக்கிறது கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டு கூறியது. திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள் அபாரம் சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்து இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய தனி பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடிகள் படிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு யானைகளும் இருக்கின்றன. செட்டாலியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார் சிந்திக்க வைக்கிறார் அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ் my heart congratulations to கார்த்திக் சுப்புராஜ் and team என தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D