- Home
- Cinema
- Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Jason Sanjay About Sister Divya Saasha : நடிகர் விஜய்யின் மகனும், 'சிக்மா' படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தன் தங்கை திவ்யா சாஷா பற்றி பேசியுள்ளார். அவர் என்ன சொன்னார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Jason Sanjay About Sister Divya Saasha
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய், 'சிக்மா' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சுந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் அப்டேட்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தின் புரொமோஷனுக்காக ஜேசன் சஞ்சய் சமீபத்தில் கொடுத்த பேட்டிகளும் கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக, அப்பா விஜய் மற்றும் அவரது அரசியல் பிரவேசம் பற்றி ஜேசன் பேசியது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இப்போது, தன் தங்கை திவ்யா சாஷா பற்றி அவர் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.
Jason Sanjay : அப்பா தான் பர்ஸ்ட் சாய்ஸ்... ஜேசன் சஞ்சய்யின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் செம குஷி!
தங்கை பற்றி பேசிய சஞ்சய்
சின்ன வயதில் தாங்கள் இருவரும் அதிகம் சண்டை போட்டுக் கொள்வோம் என்றும், ஆனால் வீட்டை விட்டுப் பிரிந்து இருந்தபோதுதான் ஒருவரையொருவர் மிஸ் செய்யத் தொடங்கினோம் என்றும் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். தனது முதல் படமான 'சிக்மா' படத்தின் அவுட்லைனை முதன்முதலில் திவ்யாவிடம் தான் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "சின்ன வயசுல ஏதாவது சின்ன விஷயத்துக்காக சண்டை வந்துடும். ஆனா, எல்லா தடவையும் தப்பு என் மேலதான்னு வீட்ல நம்புவாங்க. அதுக்கப்புறம், படிப்புக்காக முதல்ல நான் வீட்டை விட்டு வெளியே போனேன். கொஞ்ச நாள் கழிச்சு நான் ஊருக்கு வந்தப்போ, தங்கை திவ்யாவும் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு போயிட்டா. ஒரே வீட்ல இருந்துட்டு, தனித்தனியா போன பிறகுதான் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு மிஸ் பண்றோம்னு புரிஞ்சது," என்று ஜேசன் சஞ்சய் கூறினார்.
Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!
கதையை முதலில் திவ்யா சாஷாவிடம் தான் சொன்னேன்
தொடர்ந்து பேசிய அவர் "அதுக்குப் பிறகு, வீடியோ கால்ல அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். தூரம் அதிகமான பிறகுதான் எங்க உறவு இன்னும் வலுவாச்சு. திவ்யாவுக்கு சினிமா மேல பெரிய ஆர்வம் இருக்கு. என்னோட முதல் படமான 'சிக்மா' கதையை முதல்ல அவகிட்டதான் சொன்னேன். அவ எந்தத் தயக்கமும் இல்லாம, நேர்மையான கருத்தைச் சொல்வா. அதனாலதான், என் ஐடியாக்களை முதல்ல அவகிட்ட ஷேர் பண்றேன். ஒரு முடிவு எடுத்துட்டா, அதுல இருந்து அவளை சுலபமா மாத்த முடியாது. யாராவது வேற கருத்து சொன்னாலும், தன்னோட நிலைப்பாட்டை தெளிவா விளக்கி மத்தவங்களை புரிய வைப்பா. நான் இயக்குநரா வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகுதான், அப்படி ஒரு குணம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லா புரியுது," என்று ஜேசன் சஞ்சய் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் செய்த சம்பவம்
மறுபுறம் ஜேசன் சஞ்சய், சிறு வயதில் தான் செய்த சேட்டைகள் குறித்தும் அந்த பேட்டியில் கூறி இருந்தார். ஒருமுறை வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரவில் கிளம்பி நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்ட்டதாகவும், இரவில் தன்னுடைய போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதால், காலையில் பெற்றோர் தன்னை வலைவீசி தேடியதாகவும், அவர் போலீஸில் புகார் அளிக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் தான் வீட்டுக்கு வந்த பின்னர் செம டோஸ் விழுந்ததாகவும் கூறி இருந்தார்.
சங்கீதா கேட்ட விவாகரத்து.. தந்தை விஜய்க்கு எதிராக ஜேசன் சஞ்சய் எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

