MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!

Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!

Sigma Movie First Single : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி உள்ள சிக்மா திரைப்படத்தில் இடம்பெறும் சிக்மா ஸ்டைல் பாடல் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 05 2026, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sigma Style Song Decoding
Image Credit : X

Sigma Style Song Decoding

முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராஜு சுந்தரம், சம்பத், அன்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். படத்தை வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிக்மா ஸ்டைல் பாடல் ரிலீஸ்
Image Credit : X

சிக்மா ஸ்டைல் பாடல் ரிலீஸ்

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘Sigma Style’ வெளியிடப்பட்டுள்ளது. தமனின் துள்ளலான இசையில் ஸ்மைல் துப்பாகிஸ் மற்றும் எம்.சி. ரூட் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சமூக மற்றும் அரசியல் கருத்துகளை மறைமுகமாக பிரதிபலிப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். “எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்”, “தகுதி தரம் பார்த்து பேசுறதில்ல மோரல்”, “பதவி மேல ஆசை இல்லை” போன்ற வரிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Related image2
Sigma : முதல்வர் விஜய் மகன் இயக்கிய சிக்மா எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா
34
விஜய் ரெபரன்ஸ்
Image Credit : X

விஜய் ரெபரன்ஸ்

மேலும், பாடல் காட்சிகளில் ஜேசன் சஞ்சயும் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடலின் இறுதியில் விஜய்யின் பிரபலமான ‘போக்கிரி’ திரைப்படத்தை நினைவூட்டும் காட்சியும் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் தனது திரைப்பயணத்தில் பல பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலம் சமூக கருத்துகளை வெளிப்படுத்தியவர். தற்போது அவரது மகன் இயக்கும் படத்தின் முதல் பாடலிலும் அதேபோன்ற கருத்துகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
சிக்மா ரிலீஸ்
Image Credit : X

சிக்மா ரிலீஸ்

சினிமாவிலிருந்து விலகி அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் விஜய்யின் பின்னணியில், ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சியாக உருவாகும் ‘சிக்மா’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், விஜய்யின் அரசியல் கட்சிக்கான பாடலுக்கும் இசையமைத்திருந்த தமன், தற்போது ‘சிக்மா’ படத்திற்கும் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. சிக்மா திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படம் வருகிற ஜூலை 31ந் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜேசன் சஞ்சய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Recommended image2
Vijay : அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை
Recommended image3
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Related Stories
Recommended image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Recommended image2
Sigma : முதல்வர் விஜய் மகன் இயக்கிய சிக்மா எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved