MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jason Sanjay : அப்பா தான் பர்ஸ்ட் சாய்ஸ்... ஜேசன் சஞ்சய்யின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் செம குஷி!

Jason Sanjay : அப்பா தான் பர்ஸ்ட் சாய்ஸ்... ஜேசன் சஞ்சய்யின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் செம குஷி!

Jason Sanjay Opens Up About Vijay : சிக்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், தன்னுடைய தந்தை தளபதி விஜய் குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 01 2026, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jason Sanjay Speaks About Thalapathy Vijay
Image Credit : X

Jason Sanjay Speaks About Thalapathy Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலுக்குள் முழுமையாக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஆட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். அவரின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், அரசு பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மெட்ரோ திட்ட ஆய்வில் ஈடுபட்ட அவர், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜேசன் சஞ்சய் பேட்டி
Image Credit : facebook/ActorJasonSanjay

ஜேசன் சஞ்சய் பேட்டி

இந்த சூழலில், விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. விஜய் சினிமாவிலிருந்து விலகிய நிலையில், மகன் இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்குவது ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் முதலில் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலையில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனதால், சிக்மா படம் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் ஜேசன் சஞ்சய் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.

Sigma : முதல்வர் விஜய் மகன் இயக்கிய சிக்மா எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா

Related Articles

Related image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Related image2
Sigma : மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விஜய்... ஜனநாயகனால் தள்ளிப்போகும் சிக்மா..?
35
அப்பா தான் முதல் சாய்ஸ்
Image Credit : X

அப்பா தான் முதல் சாய்ஸ்

அதன் ஒரு பகுதியாக, பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். பேட்டியின் தொடக்கத்திலேயே தொகுப்பாளர் டிடி, "முதல்வரின் மகனை பேட்டி எடுப்பது கொஞ்சம் வித்தியாசமான உணர்வாக இருக்கிறது" என்று கூற, அதற்கு ஜேசன் சஞ்சய், "எப்போதும் போல இயல்பாகவே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

பின்னர், "சிக்மா ஹிட் ஆகி, உங்களை ஹாலிவுட் படம் இயக்க நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், நீங்கள் இந்தியாவில் இருந்து ஒரு நடிகரை அழைத்து செல்ல வேண்டும் என்றால் யாரை அழைத்துச் செல்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "என் மனதில் முதலில் வருவது என் அப்பாதான். இருவரும் கோட்-சூட்டில் இருந்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்" என்று அவர் பதிலளித்தார். இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தனது சிறுவயதில் அப்பாவுடன் முதல் முறையாக சிஎஸ்கே போட்டியை நேரில் பார்த்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அது தனது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

45
யுவனின் தீவிர ரசிகன்
Image Credit : stockPhoto

யுவனின் தீவிர ரசிகன்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்த அனுபவம் குறித்தும் ஜேசன் சஞ்சய் மனம் திறந்தார். "யுவன் சார், அப்பா மற்றும் அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அன்பாக விசாரித்தார். அவர்கள் இருவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நான் கூறினேன்" என்றார். அதோடு, ஒருமுறை 'யுவனிசம்' டி-ஷர்ட் அணிந்திருந்த தனது புகைப்படத்தை விஜய், யுவன் சங்கர் ராஜாவுக்கு அனுப்பியிருந்ததாகவும், தானும் யுவனின் தீவிர ரசிகர் என்றும் கூறினார். மேலும், 'சிக்மா' திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடியிருப்பதாகவும் அவர் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார்.

55
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
Image Credit : instagram

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

சமீப காலமாக விஜய் குடும்பம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் பரவி வந்த நிலையில், ஜேசன் சஞ்சய் அளித்த இந்த பேட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தந்தையைப் பற்றிய அவரது பாசமான பேச்சு, இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த முழு பேட்டியும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் இந்த பேட்டி பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜேசன் சஞ்சய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
Recommended image2
ஜன நாயகன் முதல் நாள் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.. எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Now Playing
டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
Related Stories
Recommended image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Recommended image2
Sigma : மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விஜய்... ஜனநாயகனால் தள்ளிப்போகும் சிக்மா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved