MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Sigma : மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விஜய்... ஜனநாயகனால் தள்ளிப்போகும் சிக்மா..?

Sigma : மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விஜய்... ஜனநாயகனால் தள்ளிப்போகும் சிக்மா..?

Sigma Release Postponed? விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படமான சிக்மா, ஜூலை 31ந் தேதி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 14 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sigma Release Postponed?
Image Credit : Instagram

Sigma Release Postponed?

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது 'ஜனநாயகன்' மற்றும் 'சிக்மா' திரைப்படங்களின் வெளியீட்டு மாற்றம். நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் வெளியாக உள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படமான சிக்மாவின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் அரசியலுக்கு முழுமையாக களமிறங்குவதற்கு முன்பே, ஜனநாயகன் தான் தனது இறுதி திரைப்படம் என்று அறிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் ரிலீஸ் எப்போ?
Image Credit : X

ஜனநாயகன் ரிலீஸ் எப்போ?

ஆனால் பல்வேறு காரணங்களால், குறிப்பாக சென்சார் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, படத்தின் வெளியீடு நீண்ட காலம் தாமதமானது. இதற்கிடையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக, தற்போது வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் ஒரு சாதாரண சினிமா வெளியீடாக இல்லாமல், விஜயின் திரையுலக வாழ்க்கையின் நிறைவு அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. அதனால் வருகிற ஜூலை 24ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படும் இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்ற தயாராகி வருகின்றனர்.

Related Articles

Related image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Related image2
Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!
34
சிக்மா ரிலீஸ் சிக்கல்
Image Credit : Instagram

சிக்மா ரிலீஸ் சிக்கல்

மறுபுறம், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படமும் ஆரம்பத்திலிருந்தே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் திரையுலகில் அதிக கவனம் பெற்றுள்ளது. முதலில் சிக்மா திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஜனநாயகன் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

44
ஆகஸ்டுக்கு தள்ளிப்போகும் சிக்மா?
Image Credit : X

ஆகஸ்டுக்கு தள்ளிப்போகும் சிக்மா?

மேலும், புதிய இயக்குநராக ஜேசன் சஞ்சய்க்கு சிக்மா முக்கியமான படம் என்பதால், பெரிய படங்களுடன் மோதாமல், வேறு ஏதாவது வெளியீட்டு தேதி கிடைத்தால் படத்தின் வசூலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என திரைப்பட வட்டாரங்கள் கருதுகின்றன. அதேபோல், தற்போது வெளியிட்டால் சிக்மா படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காது என்பதும் இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சிக்மா திரைப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜூலை மாதம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படத்திற்கே திரையரங்குகளில் முழு கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Related Stories
Recommended image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Recommended image2
Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved