- Home
- Astrology
- Guru Peyarchi 2026: இன்று குரு பெயர்ச்சி.! உச்ச ராசியில் குரு பகவான்.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Guru Peyarchi 2026: இன்று குரு பெயர்ச்சி.! உச்ச ராசியில் குரு பகவான்.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Guru Peyarchi 2026 Date and Time: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். 12 ராசிகளுக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi 2026 Palangal in Tamil
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜூன் 2, 2026 அன்று நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். குரு பகவான் கடக ராசியில் அமர்ந்து தனது சுப பார்வைகளான 5, 7, 9 ஆகிய பார்வைகளால் விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். குருவின் இந்த உச்சப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்களையும், அதற்கான எளிய பரிகாரங்களையும் விரிவாகக் காண்போம்.
1. மேஷம் - 4-ம் இட குரு (சுக ஸ்தானம்)
பலன்கள்: மேஷ ராசிக்கு குரு 4-ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு வருகிறார். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.
Guru Peyarchi 2026 Palangal in Tamil: மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
2. ரிஷபம் - 3-ம் இட குரு (முயற்சி ஸ்தானம்)
பலன்கள்: குரு 3-ஆம் வீட்டிற்கு வருவதால் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால், குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் விழுவதால் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும். திருமண யோகம், கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
Guru Peyarchi 2026 Palangal in Tamil: ரிஷபம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
3. மிதுனம் - 2-ம் இட குரு (தன ஸ்தானம்)
பலன்கள்: உங்கள் ராசியில் இருந்த குரு இப்போது 2-ஆம் வீடான குடும்ப மற்றும் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதன் காரணமாக நிதி நிலை பன்மடங்கு உயரும். குடும்பத்தில் இருந்த சண்டைகள், பிரிவுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பேச்சாற்றலால் காரியங்களைச் சாதிப்பீர்கள். கண் மற்றும் பற்கள் சார்ந்த உபாதைகள் நீங்கும்.
பரிகாரம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற பண உதவி அல்லது நோட்டுப் புத்தகங்களை தானமாக வழங்கவும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
4. கடகம் - ஜென்ம குரு (ராசியில் குரு)
பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுகிறார். "ஜென்ம குரு" என்பதால் மனக்குழப்பங்கள், பொறுமைத் தேவைப்படும் சூழ்நிலைகள் வரலாம். எனினும், குருவின் சுப பார்வைகள் 5, 7, 9 ஆகிய இடங்களில் விழுவதால் பூர்வீக சொத்து லாபம், புத்திர பாக்கியம், திருமண யோகம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர நன்மைகள் கூடும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
5. சிம்மம் - 12-ம் இட குரு (விரய ஸ்தானம்)
பலன்கள்: சிம்ம ராசிக்கு குரு 12-ஆம் வீடான விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். சுப விரயங்கள் (வீடு கட்டுதல், திருமணம், சுப நிகழ்ச்சிகள்) அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனிப்பு தேவை.
பரிகாரம்: பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு காப்பரிசி அல்லது அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறந்தது.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
6. கன்னி - 11-ம் இட குரு (லாப ஸ்தானம்)
பலன்கள்: கன்னி ராசிக்கு 11-ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு குரு வருகிறார். "லாப குரு" அமோகமான பலன்களைத் தருவார். பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடையின்றி வந்து சேரும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரர் அல்லது சாய் பாபா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
7. துலாம் - 10-ம் இட குரு (கர்ம ஸ்தானம்)
பலன்கள்: குரு 10-ஆம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். "பத்தில் குரு வந்தால் பதவி மாற்றம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, வேலையில் சில மாற்றங்களோ அல்லது புதிய பொறுப்புகளோ கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை நிதானமாகச் செய்யவும். உழைப்பு அதிகமாக இருந்தாலும் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்து வாருங்கள்; தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
8. விருச்சிகம் - 9-ம் இட குரு (பாக்கிய ஸ்தானம்)
பலன்கள்: உங்களுக்கு குரு பகவான் 9-ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகிறார். இது உங்களுக்கு ஒரு "பொற்காலம்" என்றே சொல்லலாம். தந்தை வழியில் நன்மைகள், பூர்வீக சொத்து லாபம் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே முடியும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துவது அல்லது குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுவது உத்தமம்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: விருச்சிகம்: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
9. தனுசு - 8-ம் இட குரு (அஷ்டம ஸ்தானம்)
பலன்கள்: உங்கள் ராசி நாதனான குரு 8-ஆம் வீட்டிற்குச் செல்வதால், எதிலும் சற்று நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம். எனினும், மறைமுக வழிகளில் (இன்சூரன்ஸ், உயில் சொத்துக்கள்) தன லாபம் வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது வாழைப்பழம் கொடுத்து வர கெடுபலன்கள் குறையும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
10. மகரம் - 7-ம் இட குரு (களத்திர ஸ்தானம்)
பலன்கள்: குரு பகவான் 7-ஆம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வந்து, உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார். நீண்ட நாட்களாகத் திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்தி வரும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபமும், புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு, துவரம் பருப்பு தானம் செய்வது நல்லது.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: மகரம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
11. கும்பம் - 6-ம் இட குரு (ருண ரோக சத்ரு ஸ்தானம்)
பலன்கள்: குரு 6-ஆம் வீட்டிற்கு வருவதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் கடன் சுமை சற்று எட்டிப் பார்க்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் நிதானமாகப் பழகவும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். எனினும், போட்டித் தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றி கிட்டும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து, அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கும்பம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
12. மீனம் - 5-ம் இட குரு (பூர்வ புண்ணிய ஸ்தானம்)
பலன்கள்: உங்கள் ராசி நாதனான குரு பகவான் 5-ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்தில் மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். கலை மற்றும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்துச் சிக்கல்கள் தீரும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி அல்லது எதேனும் ஒரு குரு ஸ்தலத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்யவும்.
Guru Peyarchi Palangal 2026 in Tamil: மீனம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

