MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

Guru Peyarchi Palangal 2026 in Tamil: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பகவான்  கடகத்திற்குள் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
| Updated : May 25 2026, 11:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Guru Peyarchi Palangal 2026 in Tamil
Image Credit : Gemini AI

Guru Peyarchi Palangal 2026 in Tamil

மிதுன ராசிக்கு குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாக விளங்கி வருகிறார். இதுவரை ஜென்ம குருவாக பலன் கொடுத்துக் கொண்டிருந்த அவர், குரு பெயர்ச்சிக்கு பின்னர் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு செல்ல இருக்கிறார். இது மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. 

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திலும், ஒன்பதாம் பார்வை பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் விழ இருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகி 43 நாட்கள் நேர் கதியிலும், அதே ராசியில் 42 நாட்கள் வக்ர நிலையிலும் பயணிக்கிறார். இதனால் மிதுன ராசிக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Mithunam Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்
Image Credit : Getty

குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் அனைத்து யோகத்தையும் தரக்கூடிய காலமாக அமையும். உங்களுடைய வாக்கில் முப்பெரும் தேவியர்களான அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் குடியேறுவார்கள். அசுப கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் நேரம் நெருங்கியுள்ளது. உங்களுடைய வாக்கு தோஷம் அகன்று வாக்கு வன்மை பெருகும். குடும்பத்தில் இருந்த மன சஞ்சலங்கள் அகலும். 

இதுவரை வறுமையில் வாடியவர்கள் இனி கோபுரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத மேன்மை உண்டாகும். நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நிலையான வாழ்க்கை கிடைக்க உள்ளது. மகிழ்ச்சியும், சந்தோஷமும் அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடிய நிலை இனி அடியோடு மாறும்.

Kadagam Guru Peyarchi Palangal 2026 in Tamil | கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

Related Articles

Related image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
Related image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
36
குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்
Image Credit : AI Generated

குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்

தன ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பது மற்றும் அவரின் ஐந்தாம் பார்வை எதிரிகள் ஸ்தானத்தில் விழுவது என்பது மிகுந்த சுபமானதாக கருதப்படுகிறது. ஆறாம் இடம் என்பது கடன், நோயை மட்டும் கூறக்கூடிய இடம் கிடையாது. அது ஒருவரின் உத்தியோகத்தை தீர்மானிக்கக்கூடிய இடமாகும். எனவே இந்த இடத்தில் குருவின் பார்வை விழுவதால் நிரந்தர வேலை கிடைக்கும். 

அரசு வேலைக்கான வாய்ப்புகளும் உண்டு. அவமானங்கள், மனக்கசப்புகள் மறையும். உங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வைத்தியங்கள் பலன் தரும். சிறு உடல் உபாதைகள் இருப்பினும் அவை மறையும். எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவதால் வெற்றி உங்களைத் தேடி வரும். உங்கள் புகழும், பெயரும் அதிகரிக்கும்.

Simmam Guru Peyarchi Palangal 2026 in Tamil | சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

46
குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்
Image Credit : stockPhoto

குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் விழுகிறது. மேலும் விபரீத ராஜயோகமும் உருவாவதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பங்குச்சந்தை மற்றும் வணிகம் மூலம் வருமானம் உயரும். சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி போன்றவற்றின் மூலம் பலன்கள் கிடைக்கலாம். எட்டாம் இடம் என்பது எதிர்கால தேவைக்கு முதலீடு செய்யும் இடம் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நல்ல முதலீடுகளை ஏற்படுத்துவீர்கள். 

வைப்புத் தொகை அல்லது மனை, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் சொத்து சேர்க்கை ஆகியவற்றில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் முடியை இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் சிலர் ஆரோக்கியத்தில் மேன்மை அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.

Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil | கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்

56
குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்
Image Credit : Asianet News

குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் விழுவதால், தொழிலில் கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறும் சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தைரியமும், துணிச்சலும் அதிகரித்து புதிய ஆற்றலும், உத்வேகமும் பிறக்கும். உடல் சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவானை குரு பகவான் ஒன்பதாவது பார்வையில் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். 

எனவே இந்த நேரத்தில் உங்கள் தொழில் மற்றும் குடும்பத் தொழில் அனைத்தும் லாபத்தைப் பெறும். லாபங்கள் முதலீடுகளாக மாறும். இரவு, பகல் பார்க்காமல் கடுமையாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். சில்லறை வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களாக மாறக்கூடிய அமைப்பு உருவாகும்.

Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026

66
குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்
Image Credit : AI Generated

குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்

திருவெண்காடு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வழிபட்டு வருவது மிகவும் புண்ணியங்களைத் தரும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நவகிரக தோஷத்தை குறைக்கும். 

  • அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6.
  • அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்.
  • அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு.
  • அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
ராஜ யோகம்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Marriage Luck Zodiac Signs : இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதல், ஹனிமூன், திருமண யோகம் அடிக்குது.. 4 கிரக சேர்க்கை அதிரடி
Recommended image2
புதன் சுக்கிரன் பெயர்ச்சி 2026: ஜூன் 11 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி! ஜாக்பாட்!
Recommended image3
Guru Peyarchi 2026: இன்று குரு பெயர்ச்சி.! உச்ச ராசியில் குரு பகவான்.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Related Stories
Recommended image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
Recommended image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved