Guru Peyarchi Palangal 2026 in Tamil: துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
Guru Peyarchi Palangal 2026: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi Palangal 2026
துலாம் ராசியின் மூன்று மற்றும் ஆறாம் வீடுகளின் அதிபதியாக விளங்கும் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். மேலும் இவர் தனது ஐந்தாம் பார்வையால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் இந்த காலகட்டத்தில் அதிசாரமாக சிம்ம ராசிக்கு செல்லும் அவர் 43 நாட்கள் நேர்ததியிலும், 42 நாட்கள் வக்ர கதியிலும் சஞ்சரிக்கிறார். இதனால் துலாம் ராசிக்கு ஏற்படக்கூடிய பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Viruchigam Guru Peyarchi 2026 Palangal | விருச்சிகம்: குருப்பெயர்ச்சி 2026 பலன்கள்
துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் செல்வ வளம் பெருகும் காலமாக இருக்கும். சுகபோகம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் தேடி வரும். தொழிற் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது என்பது சிறந்த பலனாக கருதப்படுகிறது. “பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்” என்பது பழமொழி. ஆனால் தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு மட்டுமே குரு பகவான் சாதகமற்ற பலன்களை வழங்குவார். பிறருக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது உபரியான லாபத்தைத் தரும். ஆறாம் அதிபதியான குரு பகவான் பத்தாமிடத்தில் உச்சம் பெறுவது அரசு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம். சிலர் லஞ்ச லாவண்ய புகார்களில் சிக்கலாம். மன உளைச்சல் காரணமாக வேலையை ராஜினாமா செய்ய நேரிடும். கடன் வாங்கி புதிய முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். உத்தியோகம் சார்ந்த பிரச்சினைகள் எந்த விதத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதால் நிதானம் அவசியம்.
Dhanusu Guru Peyarchi 2026 Palangal in Tamil | தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே திடீர் பண வரவு உண்டாகும். உங்கள் ஆளுமையில் ஒரு வசீகரமான தோற்றம் ஏற்படும். போதுமான பணம் கைக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். அளவுக்கு மீறி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக்கனியை பறிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு புதிய பாடங்களை கற்றுத் தரும். குரு பகவான் வளமான வாழ்க்கையை வழங்க இருக்கிறார். உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ராகு, கேதுவின் சாதகமற்ற நிலை சில சமயங்களில் சறுக்கல்களையும் ஏற்படுத்தும்.
Makaram Guru Peyarchi 2026 Palangal in Tamil | மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலை வலுவாகும். வருமான பற்றாக்குறையால் இருந்து வந்தவர்களுக்கு தாராள பண வரவு உண்டாகும். சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். அனாவசிய செலவுகள் குறையும். பழைய வீட்டை மராமத்து செய்து புதிய வீடு போல மாற்றுவீர்கள்.
வாடகை வீட்டை சொந்த கட்டிடமாக மாற்றும் வாய்ப்புகளும் உண்டு. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழி உறவுகளில் சீராகும். சில சமயம் தேவையற்ற விரயங்களும் ஏற்படலாம். பூமி சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் சீராகும். சிலருக்கு அதிக அலைச்சல் மற்றும் வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். மாணவர்கள் அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க உகந்த காலமாக இருக்கும்.
Kumbam Guru Peyarchi 2026 Palangal | கும்பம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் வருகிறது. இதன் காரணமாக சிலருக்கு தேவையற்ற வம்புகள் வரலாம். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படாமல் போகலாம். நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றலாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களே உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். சூழ்நிலை கைதியாக மாறி செய்யாத குற்றத்திற்கு கூட தண்டனையை அனுபவிக்கலாம்.
குடும்ப சொத்துக்களில் இழப்புகள் ஏற்படலாம். உறவினர்களின் செயல்கள் வருத்தத்தை தரலாம். தவறான உணவுப் பழக்கத்தால் உடல் நலம் குறைலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து பணத்தை இழக்க நேரிடும். கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். யாருக்காகவும் ஜாமின் போட வேண்டாம். அலுவலகப் பிரச்சனைகளில் அமைதி காப்பது நல்லது.
Meena Rasi Guru Peyarchi Palangal 2026 | மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்
வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் கால பைரவரை வழிபட கஷ்டங்கள் குறையும்.
- அதிர்ஷ்ட எண்: 2, 6, 7, 9.
- அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு.
- அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
- அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

