MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Guru Peyarchi Palangal 2026 in Tamil: விருச்சிகம்: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்

Guru Peyarchi Palangal 2026 in Tamil: விருச்சிகம்: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்

Guru Peyarchi 2026 Palangal: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று கடக ராசியில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
| Updated : May 25 2026, 11:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Guru Peyarchi 2026 Palangal
Image Credit : Gemini AI

Guru Peyarchi 2026 Palangal

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் நின்று பலனளித்த குரு பகவான், குரு பெயர்ச்சிக்குப் பின்னர் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறப் போகிறார். விருச்சிக ராசியின் இரண்டு மற்றும் ஐந்தாம் வீடுகளின் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன்களைத் தரும். மேலும் குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியிலும், ஏழாம் பார்வை மூன்றாம் வீடான சகாய ஸ்தானத்திலும், ஒன்பதாவது பார்வை ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிய இருக்கிறது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

Dhanusu Guru Peyarchi 2026 Palangal in Tamil | தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Image Credit : Gemini AI

விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

குரு பெயர்ச்சிக்குப் பின்னர் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிய இருக்கிறது. அதை வாங்கித் தந்த பெருமை குரு பகவானைச் சேரும். சமூகத்தில் அந்தஸ்து, புகழ், கௌரவம் என வாழ்வில் ஒட்டுமொத்த மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சகலவிதமான காரிய சித்திகளும் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் ஜாதகருக்கு அதிர்ஷ்டகரமான அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். 

இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க விரும்பிய அனைத்து இன்பங்களும் உங்களுக்கு கிடைக்கும். அஷ்டம குருவால் ஏற்பட்ட அவமானங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, மனைவி, மக்கள், பெற்றோர்கள் என அனைவரின் ஆதரவு கிடைக்கும். பிறவிக் கடனை தீர்க்க காலங்கள் உருவாகும். உங்கள் உள்ளத்திலும், உடலிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். தெய்வீக ஆற்றலுடன் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த தடை, தாமதம் அனைத்தும் அகலும்.

Makaram Guru Peyarchi 2026 Palangal in Tamil | மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

Related Articles

Related image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: மகரம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Related image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
36
குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்
Image Credit : stockPhoto

குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை ராசியின் மீது விழுகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்வதால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். உடலும், உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்கும் வண்ணம் நல்ல சம்பவங்கள் நடக்கும். மனரீதியான பிரச்சனைகள் சீராகும். நேர்மறை எண்ணங்கள் பெருகும். பொறுமையும், புத்திக் கூர்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். 

உங்கள் பற்றி தவறாக பேசியவர்கள், அவதூறு பேசியவர்கள் உண்மைகளை உணர்ந்து வருந்துவார்கள். உங்கள் மேல் விழுந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், ராசி ஆகியவை வலுப்பெறுவதால் அசுப பலன்கள் உங்களை விட்டு அகலும். வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தடைபட்ட அனைத்து செயல்களும் இந்த ஓராண்டுக்குள் நடந்து முடியும்.

Kumbam Guru Peyarchi 2026 Palangal | கும்பம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

46
குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7 ஆவது பார்வை மூன்றாம் வீடான சகாய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே வாழ்க்கையின் சூழ்நிலை ஒட்டுமொத்தமாக மாறும். அதிர்ஷ்டத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலைப்பளுவினால் ஏற்பட்ட அழுத்தங்கள் குறையும். குறைவான உழைப்பில், நிறைவான வருமானம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். விடாமுயற்சியும், தைரியமும் மேலோங்கும். அனைத்து பிரச்சினைகளையும் தனி ஒரு ஆளாக எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றல்களைப் பெறுவீர்கள். சொத்து ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். அடமானத்தில் இருந்த சொத்துக்கள், நகைகளை மீட்டு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.

Meena Rasi Guru Peyarchi Palangal 2026 | மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

56
குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கிடைக்கும். திறமைகள் கைகூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் புது வசந்தம் வீசும். மனப்புழப்பத்தில் இருந்தவர்கள் தெளிவாக உணர்வீர்கள். உங்கள் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். 

எதிர்காலத்தில் நடக்கப் போவதை உணர்ந்து முன்னேற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் வரக்கூடும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற சகல விதமான பலன்களும் கிடைக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.

Mesham Guru Peyarchi 2026 Palangal in Tamil: மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026

66
குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்
Image Credit : AI Generated

குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்

வேல் வழிபாடு செய்வது நன்மை தரும். வேலுக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி வேல்மாறல் பதிகம் பாடி பூஜை செய்து வழிபடுவது எதிர்ப்புகளை நீக்கும்.

  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9.
  • அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு.
  • அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு. 
  • அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
ராஜ யோகம்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : சொத்து, சுகம் தேடி வரும் அந்த 3 ராசிகள்! கோடீஸ்வர யோகத்தால் சொத்துகள் குவியும்!
Recommended image2
Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?
Recommended image3
Baba Vanga Weekly Horoscope: மிரள வைக்கும் பாபா வங்கா கணிப்பு.. நாளை முதல் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்?
Related Stories
Recommended image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: மகரம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Recommended image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved