Guru Peyarchi Palangal 2026 in Tamil: தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Guru Peyarchi Palangal 2026 in Tamil: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 26, 2026 குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi Palangal 2026 in Tamil
தனுசு ராசியின் அதிபதியாகவும், தொழில் ஸ்தான அதிபதியாகவும் விளங்கிவரும் குரு பகவான் 02-06-2026 அன்று களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனது ஐந்தாம் பார்வையால் 12ஆம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு சென்றாலும் அவரது பார்வை படும் இடங்கள் சுபமாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஏற்றத்தையும், மாற்றத்தையும் வழங்க இருக்கிறது. அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
Makaram Guru Peyarchi 2026 Palangal in Tamil | மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
தனுசு ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவின் காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக தன கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் நின்றால் அதன் சம சப்தம பார்வை தன ஸ்தானத்தில் பதியும். ராசியின் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற இருக்கிறார். மேலும் அவர் தன ஸ்தானத்தை பார்ப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு கிடைக்கக்கூடும். பண பலம் அதிகரிப்பதால் உற்றார் உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைக்காக இடம் விட்டு இடம் அல்லது ஊர் விட்டு ஊர் மாற நேரலாம். உங்களை ஒதுக்கியவர்கள் இனி உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குரு பெயர்ச்சிக்குப் பின்னர் உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து அனைத்தும் உயரும். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த இடர்பாடுகள் அனைத்தும் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். உங்கள் இருக்கும் இடம் தேடி அதிர்ஷ்டங்களும், ஐஸ்வர்யங்களும் வரும்.
Kumbam Guru Peyarchi 2026 Palangal | கும்பம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை பன்னிரெண்டாம் வீடான அயன, சயன, விரய ஸ்தானத்தில் இதன் காரணமாக உங்கள் வீட்டில், குடும்பத்தில் மங்களகரமான சுப விசேஷங்கள் நடக்கும். அனைத்து காரியங்களிலும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். பாஸ்போர்ட், விசா சார்ந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அயல்நாட்டு குடியுரிமை கிடைக்கும்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களை துரத்திய அவமானங்கள், அசிங்கங்கள் அனைத்தும் வாழ்க்கையிலிருந்து விலகும். உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். முறையான திட்டமிடுதல் மூலம் அடுத்த ஒரு வருடம் உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக மாறும்.
Meena Rasi Guru Peyarchi Palangal 2026 | மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்பாராத தன லாபம் மற்றும் அதிர்ஷ்டம் தேடி வரும். குடும்பத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மாற்றம், வீடு மாற்றம் என விரும்பிய மாற்றங்கள் நடக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைப் பேறு, திருமணம், வீடு வாங்கும் யோகம், தொழிலில் வளர்ச்சி என அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பங்காளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். பூர்வீக சொத்து, தாய் வழி சொத்துக்களில் பாகப்பிரிவினைகள் சுமூகமாக நடக்கும். இதன் காரணமாக திடீர் பணவரவு, லாபம் கிடைக்கும். வசூல் ஆகாமல் இருந்த கடன்கள் வசூல் ஆகும். இதனால் கடன் சுமை குறையும். உங்கள் வாக்கு வன்மையால் விரும்பியதை சாதிப்பீர்கள். துக்கம், துயரம், சங்கடங்கள் அனைத்தும் விலகும்.
Mesham Guru Peyarchi 2026 Palangal in Tamil: மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக உங்கள் கடின உழைப்புக்கான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். உடலிலும், மனதிலும் புதிய தெம்பும், தைரியமும் பிறக்கும். புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகன்று, நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் பொறுமையும், நிதானமும் எதிர்கால வாழ்வை வளமாக்கும். நிலம், மனை, வாகனம் வாங்குவீர்கள். அரசிடம் இருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும். விபரீத ராஜயோகம் காரணமாக சொத்துக்களில் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். மனக்கவலைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Rishabam Guru Peyarchi 2026 Palangal in Tamil: ரிஷபம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 & பரிகாரங்கள்
வியாழக்கிழமையில் ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசித்து வர அஷ்ட குருவால் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு உதவுவது பாக்கிய பலத்தை அதிகரிக்கும்.
- அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9.
- அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு.
- அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
- அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

