Guru Peyarchi 2026 Palangal in Tamil: மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
Mesham Guru Peyarchi 2026 Palangal in Tamil : திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இங்கு காணலாம்.

Mesham Guru Peyarchi 2026 Palangal in Tamil
ஜோதிடத்தில் சுப கிரகமாக அறியப்படும் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உச்ச வீடு என்பதால் இங்கு அவர் தனது முழு பலன்களையும் வெளிப்படுத்துவார். மேஷ ராசிக்கு ஜூன் 2, 2026 அன்று குரு பெயர்ச்சியின் போது தைரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு (4 ஆம் வீடு) மாறுகிறார். மேஷ ராசியின் 9 மற்றும் 12ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடிய அமைப்பாகும்.
Rishabam Guru Peyarchi 2026 Palangal in Tamil: ரிஷபம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மேஷம்
நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தொழிற் ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசார சிம்ம ராசிக்கு சென்று 43 நாட்கள் நேர் கதியிலும், 42 நாட்கள் வக்ர கதியிலும் (01.11.2026 முதல் 25.01.2027 வரை) சஞ்சரிப்பார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Mithunam Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
சுக ஸ்தான குருவின் பொதுவான பலன்கள்
ஒரு ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்பது சொத்து, சுகம், ஆரோக்கியம், கல்வி, தாயின் உடல்நிலை ஆகியவற்றை பற்றி கூறக்கூடிய இடமாகும். இந்த இடத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார் என்பது சுகமான அமைப்பாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசியில் குரு பகவான் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளும் ஸ்தானமாகும். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உருவாகும்.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல், எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல், எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றி நடை போடுவீர்கள். உங்கள் வாழ்நாள் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற குரு பகவான் முழு ஆசிகளை வழங்குவார். நான்காம் வீடு சொத்து, சுகங்களை மட்டும் தரக்கூடிய இடம் அல்ல. அது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இடமாகும். இங்கு தேவ குருவான குரு பகவான் அமர்வது நோயின் தாக்கத்தை குறைக்கும்.
Kadagam Guru Peyarchi Palangal 2026 in Tamil | கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் விழுகிறது. இந்த இந்த வீடு எதிர்காலத்திற்கு தேவையான முதலீட்டை குறிக்கக்கூடிய இடமாகும். இந்த இடத்தை குரு பகவான் பார்ப்பதால் எதிர்காலத்திற்கு தேவையான சேமிக்க கூடிய வகையில் உங்களின் வாழ்வாதாரம் உயரும். “எலி வலையானாலும் தனி வலை வேண்டும்” என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களுடைய சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும் காலமாகும்.
குரு பகவானின் பார்வை எட்டாம் இடத்தில் விழுவதால் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகங்களை அமைத்து தரக்கூடிய யோகத்தை குரு பகவான் உங்களுக்கு அளிப்பார். இதற்கு முன் வாங்கிய பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய சொத்துக்களும் சேரும்.
Simmam Guru Peyarchi Palangal 2026 in Tamil | சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்
சுக ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது அவரின் ஏழாம் பார்வை பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் விழுகிறது. பத்தாம் இடத்தில் குருவின் பார்வை இருப்பதால் இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தீய வினைகள் குறைந்து, நல்ல வினைகள் உங்களை வந்து சேரும். பிறவிப் பயன்படி இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் இந்த காலகட்டத்தில் அனுபவிப்பீர்கள். கர்ம பலன்கள் அனைத்தும் தீரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வந்த நிலையில் இருந்து வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் தேடி வரும். தொழில் வளர்ச்சி உச்சத்தை அடையும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும்.
Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil | கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்
குரு பகவான் தனது ஒன்பதாவது பார்வையால் பன்னிரண்டாம் வீடான அயன, சயன, விரய ஸ்தானத்தை பார்க்கிறார். இதன் காரணமாக தூக்கம் இல்லாமல் தவித்து வந்தவர்கள் இனி நிம்மதியாக தூங்குவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வந்தவர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கும் வகையில் நல்ல வேலை வாய்ப்புகள் வரும். பாஸ்போர்ட், விசா சார்ந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டில் வேலை புரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். தடைபட்ட திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும்.
Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
குரு பெயர்ச்சி பலன்கள் 2026 & பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி, திருப்புகழ் பாடி வழிபட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுங்கள்.
- அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9
- அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு
- அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
- அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

