MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Guru Peyarchi Palangal 2026 in Tamil: கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

Guru Peyarchi Palangal 2026 in Tamil: கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026

Guru Peyarchi Palangal 2026 in Tamil: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
| Updated : May 25 2026, 11:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Guru Peyarchi Palangal 2026 in Tamil
Image Credit : ChatGPT

Guru Peyarchi Palangal 2026 in Tamil

கடக ராசியினருக்கு ஆறு மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 முதல் ஜென்ம குருவாக அமர்ந்து பலன் தரப்போகிறார். ஜென்ம குருவின் காலத்தில் ராமர் வனவாசம் சென்றார் என்பது புராண கதையாகும். எனவே கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு வனவாசம் செல்ல வைப்பாரா அல்லது வாழ வைப்பாரா என்கிற சந்தேகம் எழுகிறது. ஜாதக ரீதியாக தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ஜென்ம குரு உங்களை வாழ வைப்பார். தசாபுத்தி சாதகமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு சில பாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.

ஜென்ம ராசிக்குள் வரும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் அதிசாரமாக சிம்ம ராசியில் 43 நாட்கள் நேர்கதியிலும், 42 நாட்கள் வக்ர கதியிலும் சஞ்சரிக்க இருக்கிறார். குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Simmam Guru Peyarchi Palangal 2026 in Tamil | சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்
Image Credit : Gemini AI

குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்

ஜென்ம குரு காலகட்டத்தில் ராமர் வனவாசத்திற்கு சென்றார் என்பது புராணங்களில் கூறப்பட்டுள்ள கதையாகும். ஜென்மத்தில் குரு வரும் காலத்தில் பிரச்சனை வந்துவிடும் என்கிற பயம் ஏற்படுகிறது. ஆனால் கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் ஏழு மாதங்கள் மட்டுமே இந்த ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் அதிசாரமாக சிம்மத்திற்கு சென்று அங்கு நேர் கதியிலும், வக்ர நிலையிலும் பயணிக்கிறார். குருவின் சஞ்சாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கிறது.

இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தளராத இறை நம்பிக்கை கடக ராசிக்காரர்களுக்கு பாதுகாப்பை கொண்டு வரும். இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுத் தரும். அபரிமிதமான சுப பலன்கள் கிடைக்கும். குருவின் நிலை மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்க இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு தனது உச்ச ராசிக்கு வந்து இருப்பதால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வளர்ச்சிகளும், முன்னேற்றங்களும் கிடைக்க இருக்கிறது.

Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil | கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்

Related Articles

Related image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Related image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
36
குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குரு பகவான் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழ இருக்கிறது. ஐந்தாம் வீடு என்பது பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் கதவுகளை தட்டுவார். தங்கம், வெள்ளி போன்றவற்றில் செய்த முதலீடுகள் பல மடங்கு உயரும். உழைப்பின் மூலம் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். 

இழந்த அனைத்தையும் மீட்டு எடுக்கும் யோகம் கிடைக்கும். பல வருடங்களாக தவறிய ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் நிலவிய தகராறுகள் விலகும். ஒரு தலை காதல் திருமணத்தில் முடியும். கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள், புத்திர தோஷங்கள் போன்ற பாதிப்புகள் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும்.

Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026

46
குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குரு பகவான் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் ஏழாம் பார்வை சம சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் விழுகிறது. களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவை அகலும் நேரமாகும். சில்லறைக் காரணங்களை கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். தடைபட்டவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும். உடலும் உள்ளமும் குளிரும் வகையில் நிகழ்வுகள் நடக்கும். மனம் நிம்மதி பெறும். தொழிலில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். மன உளைச்சலை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். புதிய நட்புகள் உருவாகும். காலமும், நேரமும் சாதகமாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கைகூடிவரும்.

Viruchigam Guru Peyarchi 2026 Palangal | விருச்சிகம்: குருப்பெயர்ச்சி 2026 பலன்கள்

56
குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்
Image Credit : Getty

குரு பகவான் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிய இருக்கிறது. இதனால் உத்தியோக ரீதியான நன்மைகள் கிடைக்கலாம். வெளியூர், வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குடும்பம், வியாபாரம், வருமானம், உற்பத்தி என அனைத்தும் சாதகமாக இருக்கும். குலதெய்வத்தின் முழு அருளும் கிடைக்கும். வீட்டு விசேஷங்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கிரகங்களின் ஆசி உங்களை மகிழ்விக்கும். முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும்.

Dhanusu Guru Peyarchi 2026 Palangal in Tamil | தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026

66
குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்
Image Credit : AI Generated

குரு பெயர்ச்சி 2026 பரிகாரம்

பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ ராமரை வழிபடுவது ஜென்ம குருவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும். அனுமன் வழிபாடு அனைத்து துன்பங்களையும் போக்கும்.

  • அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7.
  • அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன், சந்திரன்.
  • அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, மேற்கு.
  • அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
குரு பெயர்ச்சி
ராஜ யோகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : சொத்து, சுகம் தேடி வரும் அந்த 3 ராசிகள்! கோடீஸ்வர யோகத்தால் சொத்துகள் குவியும்!
Recommended image2
Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?
Recommended image3
Baba Vanga Weekly Horoscope: மிரள வைக்கும் பாபா வங்கா கணிப்பு.. நாளை முதல் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்?
Related Stories
Recommended image1
Guru Peyarchi Palangal 2026 in Tamil: சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
Recommended image2
Guru Peyarchi Palangal 2026 in Tamil: கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved