Guru Peyarchi Palangal 2026 in Tamil: மீனம்: குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Guru Peyarchi Palangal 2026 in Tamil: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi Palangal 2026
மீன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம குருவாக நான்காம் வீட்டில் இருந்து பலன் கொடுத்து கொண்டு இருந்த குரு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற இருக்கிறார். மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வது என்பது அபரிமிதமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். மேலும் குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்திலும், ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனி பகவான் மீதும் விழுகிறது. இதனால் மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Kumbam Guru Peyarchi 2026 Palangal | கும்பம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2026
ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்ச கிரகம் இருப்பது என்பது சுப பலன்களை தரக்கூடிய ஒரு அமைப்பாகும். ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தரமான யோக அமைப்பாகும். இது போன்ற யோக காலம் மீண்டும் உருவாக 12 ஆண்டுகள் எடுக்கும். எனவே மீன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் கோபுரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். தீராத பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையே அடியோடு மாறும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும். இதுவரை நிலவி வந்த தடைகள், தாமதங்கள் நீங்கி முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, பரிசுகள் குவியும். திருமணம், வீடு வாங்குவது, குழந்தைப் பேறு, நிரந்தர தொழில் என இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து பலன்களையும் அனுபவிப்பீர்கள்.
Makaram Guru Peyarchi 2026 Palangal in Tamil | மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக பல காலமாக தீராமல் இருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். தவறான புரிதலால் பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். உங்களைப் பற்றிய பிறரின் தவறான எண்ணங்கள் மறைந்து நல்ல சிந்தனை உண்டாகும். ஆலய திருப்பணிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள்.
பல கோயில், குளம் ஏறி, இறங்கியும் குழந்தைப் பேறு கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். தங்கள் பிள்ளைகளுக்கு திருமண வரன் வேண்டி கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு விரைவில் சுப செய்திகள் கிடைக்கும். வளைகாப்பு, காதுகுத்து, வீட்டு கிரகப்பிரவேசம் போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். உபரி வருமானத்தை சேமித்து, பொன், பொருள் வாங்குவீர்கள்.
Dhanusu Guru Peyarchi 2026 Palangal in Tamil | தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் பதிகிறது. இதன் காரணமாக குரு பெயர்ச்சிக்குப் பின்னர், மீன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உப தொழில் செய்து உபரி வருமானத்தை ஈட்டுவீர்கள். கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி மனம் நிம்மதி பெறும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் கணிசமாக உயரும். நிலையான தொழில் அல்லது வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நிரந்தரமான தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்கும்.
தடைபட்டு நின்ற சொத்து பாகப்பிரிவினைகள் சமூகமாகி லாபம் உங்களைத் தேடி வரும். பணிச்சுமை குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணங்கள் வந்து சேரும். இதன் காரணமாக தங்கம் அல்லது மனை போன்றவற்றில் முதலீடுகள் செய்வீர்கள்.
Viruchigam Guru Peyarchi 2026 Palangal | விருச்சிகம்: குருப்பெயர்ச்சி 2026 பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாவது பார்வை ராசியில் உள்ள சனி பகவான் மேல் விழுகிறது. இதன் காரணமாக உடலிலும், மனதிலும் புது தெம்பு பிறக்கும். ஏழரைச் சனியால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு ஓராண்டுக்கு விடுதலை கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் சொகுசு வாழ்க்கையை நோக்கி பயணிப்பீர்கள்.
மனதில் புதிய உற்சாகமும், தன்னம்பிக்கையும், தெளிவும் பிறக்கும். உங்கள் தோற்றத்திலும் புதிய பொலிவு கிடைக்கும். வீடு மராமத்து அல்லது வீட்டை புதுப்பித்தல் போன்றவற்றை செய்வீர்கள். எதிர்காலம் குறித்த அச்சங்கள் நீங்கும். மனதில் இருந்த கஷ்டங்கள், கவலைகள் அனைத்தும் சரியாகும். உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். நீங்கள் பட்ட கஷ்டம் அனைத்திற்கும் முடிவுரை எழுதும் காலம் நெருங்கியுள்ளது.
Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 & பரிகாரங்கள்
சித்தர்களின் ஜீவ சமாதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சுப பலன்களை அதிகரிக்கச் செய்யும். ஜென்ம நட்சத்திர நாளில் குரு பகவானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடுவது நற்பலன்களைக் கூட்டும்.
- அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
- அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
- அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, மேற்கு.
- அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

