MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: பணத்தை வாரி வழங்கும் புதன் புத்தி.! சொத்து சேர்க்க உதவும் ராகு திசை! யாருக்கு அதிர்ஷ்டகாலம் தெரியுமா?

Astrology: பணத்தை வாரி வழங்கும் புதன் புத்தி.! சொத்து சேர்க்க உதவும் ராகு திசை! யாருக்கு அதிர்ஷ்டகாலம் தெரியுமா?

ஜூலை இறுதியில் தொடங்கும் ராகு திசை மற்றும் புதன் புக்தியின் சேர்க்கை ஒரு பொற்காலமாக அமைகிறது. ராகுவின் பிரம்மாண்ட வளர்ச்சியும், புதனின் கூர்மையான புத்தியும் இணையும் இந்த காலகட்டம் அபார வளர்ச்சியைத் தந்து கோடீஸ்வர யோகத்தை உருவாக்கும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 25 2026, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கை நிறைய காசு கிடைக்க போகுது.!
Image Credit : Asianet News

கை நிறைய காசு கிடைக்க போகுது.!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. நவகிரகங்களில் ‘புத்தி காரகன்’ மற்றும் ‘தன காரகன்’ என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். அதேபோல், எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியையும், செல்வத்தையும் அள்ளிக் கொடுப்பதில் வல்லவர் ராகு பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு திசையும், அதில் புதன் புக்தியும் (புத்தி) இணையும் காலம், வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு பொற்காலமாக அமைகிறது. ஜூலை இறுயில் தொடங்கும் இந்த அதிர்ஷ்ட காலம் உங்களை குபேரன் ஆக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ராகு திசை: மாயையை மாற்றும் மாபெரும் சக்தி
Image Credit : Asianet News

ராகு திசை: மாயையை மாற்றும் மாபெரும் சக்தி

ராகு பகவான் பொதுவாக ‘சாயா கிரகம்’ (நிழல் கிரகம்) என்று அழைக்கப்படுகிறார். இவர் தனக்கென தனி ராசி எதுவுமில்லாமல், எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த அதிபதியின் பலனைத் தருவார். ராகு திசை மொத்தம் 18 ஆண்டுகள் நடைபெறும்.

ராகு என்றாலே பயப்படத் தேவையில்லை. ஜாதகத்தில் ராகு சுப ஸ்தானங்களில் (3, 6, 11-ஆம் வீடுகள்) பலமாக அமர்ந்திருந்தால், அந்த நபருக்கு ராகு திசை ஆரம்பிக்கும் போது யோக காலம் தொடங்குகிறது. குறிப்பாக, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைச் சேர்க்கும் ஆற்றல் இந்த திசைக்கு உண்டு. நிலம், வீடு, வாகனம், ஆடம்பரப் பொருட்கள் போன்றவை ராகுவின் அருளால் மிகக் குறைந்த காலத்தில் வந்து சேரும்.

Related Articles

Related image1
Astrology: சுக்கிர யோகம் தரும் ராஜ வாழ்க்கை.! 3 ராசிகளுக்கு இனி பொற்காலம்.! தங்க சிம்மாசனம் காத்திருக்கு.!
Related image2
Zodiac Signs: இந்த 3 ராசி பெண்களுக்கு கோவமே வராதாம்.! புருஷன் போட்ட கோட்டை தாண்டவே மாட்டார்களாம்.!
37
புதன் புக்தி: புத்திசாலித்தனமும் பண மழையும்
Image Credit : Asianet News

புதன் புக்தி: புத்திசாலித்தனமும் பண மழையும்

ராகு திசையில் புதன் புக்தி ஏறக்குறைய 2 ஆண்டுகள் 6 மாதங்கள் (30 மாதங்கள்) வரை நீடிக்கும். புதன் அறிவு, கணிதம், வியாபாரம், தொடர்புத் திறன் மற்றும் ஊடகத்துறைக்கு அதிபதி ஆவார்.ராகுவின் பிரம்மாண்ட சிந்தனையும், புதனின் கூர்மையான புத்திசாலித்தனமும் இணையம்போது ஒருவருக்குத் தொழிலிலும் வியாபாரத்திலும் அபார வளர்ச்சி உண்டாகும்.

  • வியாபாரப் பெருக்கம்: புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், இருக்கும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் இதுவே சிறந்த காலம்.
  • பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள்: வர்த்தகம் (Trading), பங்குச்சந்தை, மற்றும் கிரிப்டோ போன்ற துறைகளில் எதிர்பாராத அளவிற்குப் பணத்தை வாரி வழங்கும்.
  • சொத்து சேர்க்கை: ராகு சொத்துக்களை வாங்கத் தூண்ட, புதன் அதற்குரிய பணத்தையும், சரியான திட்டமிடலையும் தருவார். இதனால் புதிய நிலங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்கள் எளிதாகக் கைகூடி வரும்.
47
யாருக்கு இந்த யோகம் முழுமையாகக் கிடைக்கும்?
Image Credit : Asianet News

யாருக்கு இந்த யோகம் முழுமையாகக் கிடைக்கும்?

ராகு-புதன் சேர்க்கை அல்லது ராகு திசையில் புதன் புக்தி எல்லோருக்குமே ஒரே மாதிரியான பலனைத் தருவதில்லை. சில குறிப்பிட்ட லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டத்தின் உச்சத்தைக் கொடுக்கும்:

  • மிதுனம் மற்றும் கன்னி லக்னம்/ராசி: புதனின் சொந்த வீடுகளான மிதுனம் மற்றும் கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த காலம் அளப்பரிய தன யோகத்தைத் தரும்.
  • ரிஷபம் மற்றும் துலாம் லக்னம்/ராசி: சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாமில் பிறந்தவர்களுக்கு ராகுவும் புதனும் நட்பு கிரகங்கள் என்பதால், சொத்துக்களின் சேர்க்கை இரட்டிப்பாகும்.
  • மகரம் மற்றும் கும்பம் லக்னம்/ராசி: சனியின் ஆதிக்கம் கொண்ட இந்த ராசியினருக்கு ராகு-புதன் கூட்டணி தொழில் துறையில் மிகப்பெரிய உயரத்தைக் கொடுக்கும்.
57
இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.!
Image Credit : Asianet News

இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய வீடுகளில் ராகுவோ அல்லது புதனோ சுப கிரகங்களின் பார்வையுடன் அமர்ந்திருந்தால், அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். வெளிநாட்டுப் பயணம், மறைமுக வருமானம், அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் எதிர்பாராத பணவரவு போன்றவை இக்காலத்தில் சாத்தியமாகும்.

67
ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை.!
Image Credit : Asianet News

ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை.!

"ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை" என்பது ஜோதிடப் பழமொழி. அதிலும் குறிப்பாக, ராகு திசையில் புதன் புக்தி நடக்கும் போது, ஒருவர் தன் சொந்த புத்திசாலித்தனத்தாலும், சரியான நேரத்தில் எடுக்கும் தீர்மானங்களாலும் வாழ்க்கையில் உச்சகட்ட பொருளாதார நிலையை அடைவார். ஜாதகத்தில் இக்கிரகங்கள் சுப பலத்துடன் இருந்தால், சொத்துக்களையும் செல்வத்தையும் வாரி வழங்கும் அதிர்ஷ்ட காலம் இதுவே என்பதில் ஐயமில்லை!

77
சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.!
Image Credit : Asianet News

சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.!

ஜோதிட ரீதியாக நவகிரகங்களில் ராகு பகவான் ‘பிருஹத் யோககாரகன்’ என்றும், புதன் பகவான் ‘தன யோக அதிபதி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்ன சுபர்களின் பார்வை பெற்று, தசா புத்தி பலமாக அமையும் போது, இந்த ராகு திசை - புதன் புக்தி காலம் கோடீஸ்வர யோகத்தையும், ராஜயோக வாழ்க்கையையும் அள்ளிக் கொடுக்கும். கிரகங்களின் சுப சேர்க்கை, கேந்திர மற்றும் கோண வீடுகளில் அமரும் ராகு-புதனின் அமைப்பு, பூர்வ புண்ணிய பலத்தால் சொத்து பத்துக்களைப் பெருக்கி, சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும். சுப பலன் தரும் கிரக அமைப்புகள் அமைந்தால், இக்காலம் வாழ்க்கையின் மாபெரும் பொற்காலமாக பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஆன்மீகம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனிக்கிழமை வந்துடுச்சு... சனி பகவான் இன்று யாரை உயர்த்தப் போகிறார்? 12 ராசிகளுக்கான சூப்பர் பலன்!
Recommended image2
Kala Lakshmi Rajayoga : கோடியில் புரளப் போகும் 3 ராசிகள்! வாழ்க்கையையே மாற்றும் கலா லட்சுமி ராஜயோகம்!
Recommended image3
செவ்வாய் பெயர்ச்சியால் யோக மழையில் நனையப்போகும் 3 ராசிகள்! இனி அன்லிமிடெட் கொண்டாட்டம் தான்!
Related Stories
Recommended image1
Astrology: சுக்கிர யோகம் தரும் ராஜ வாழ்க்கை.! 3 ராசிகளுக்கு இனி பொற்காலம்.! தங்க சிம்மாசனம் காத்திருக்கு.!
Recommended image2
Zodiac Signs: இந்த 3 ராசி பெண்களுக்கு கோவமே வராதாம்.! புருஷன் போட்ட கோட்டை தாண்டவே மாட்டார்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved