- Home
- Astrology
- Rahu Transit 2026: இன்று ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம் தொடங்குது.! ஆகஸ்ட் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Rahu Transit 2026: இன்று ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம் தொடங்குது.! ஆகஸ்ட் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Rahu Transit 2026: ராகு பகவான் ஜூன் 1 அன்று சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு சோதனை காலம் தொடங்குகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

Rahu Transit 2026
ராகு பகவான், ஒரு நட்சத்திரத்திலிருந்து இன்னொரு நட்சத்திரத்திற்கு மாறும் போது சில ராசிகளுக்கு நல்லதும், சில ராசிகளுக்கு கெட்டதும் நடக்கும். அந்த வகையில், ஜூன் 1-ம் தேதி கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்திற்குள் ராகு நுழைந்துள்ளார். ஆகஸ்ட் 2 வரை அங்கேயே இருப்பார். இதனால், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகுவின் சஞ்சாரம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டை வரும். திருமணமானவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில் செய்பவர்கள் பண விஷயத்தில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
Numerology: உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? பிறந்த தேதியை வெச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரத்தால் வேலைப்பளு அதிகமாகும். உடன் வேலை செய்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அமைதியாக இருந்தால், நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
சிம்மம்
ராகுவின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைத் தரும். குடும்பத்திலும் சண்டைகள் வரும். திடீரென செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அல்லது தந்தையுடன் தகராறு ஏற்படலாம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். எந்த முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது.
விருச்சிகம்
ராகுவின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகும். செய்யும் வேலைகள் மற்றும் திட்டங்கள் தாமதமாகும். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய முதலீடுகள் அல்லது புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. நிதிநிலைமை நிலையற்றதாக இருக்கும், செலவுகள் திடீரென அதிகரிக்கும்.

