மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜோடி மாறி உடலுறவு செய்ய சொல்லி டார்ச்சர்.. சைகோ கணவர் மீது புகார்.
மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுப்பது, வரதட்சனை கேட்டு அடித்து கொடுமை செய்வது, போன்ற எண்ணற்ற கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: சாதிமாறி திருமணம் செய்ததால் கொடூரம்.. இளம் பெண்ணை நடு ரோட்டில் தூக்கிப் போட்டு கர்ப்பத்தை கலைத்து அட்டூழியம்.
முழு விவரம் பின்வருமாறு:- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் நட்சத்திர ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் அம்மர், போதைக்கு அடிமையான இவர், அவரது மனைவியை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இது மட்டுமின்றி பல ஆண்கள் மட்டும் பெண்களுடனும் அவர் பாலியல் உறவில் ஈடுபட கூடியவர், அவர் பலமுறை மனைவியுடன் இயற்கைக்கு முரணான முறையில் உடலுறவில் ஈடுபட்டு வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பணியாற்றும் ஹோட்டலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் போல பலரும் வந்திருந்தனர். அப்போது மனைவிகளை மாற்றி பாலியல் உறவு கொள்ளும் விளையாட்டை விளையாட வேண்டும் எனக்கூறி மனைவியை வற்புறுத்தினார்.
இதையும் படியுங்கள்: இந்தியாவையே அதிர வைத்த கேரள நரபலி.. அடுத்ததாக விருதுநகர் பெண் மாயம் - குவியும் புகார்கள் !
இதைக் கேட்டு அதிர்ந்த அவரது மனைவி, இதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தார், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கினார். ஹோட்டல் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை செய்தார். எப்படியோ அந்த பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தன் கணவனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் கூறி கதறி அழுதார். தன்னை பல்வேறு வகையில் கணவன் ச*** தொல்லை கொடுத்து வருவது குறித்தும், 50 லட்சம் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது குறித்தும் புகார் கொடுத்தார். தான் மாடன்பெண்ணாக இல்லை எனக் கூறி கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் அந்த புகாரில் கூறினார். தற்போது இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.