கோவையில், மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வட மாநில கும்பலை கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை வசூலித்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. 

Impersonation in government exams: மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட 8 காலி பணியிடங்கள் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, பிப்ரவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில், டெக்னீஷியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

கோவையில் 4 மையங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோவையில் திங்களன்று நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 36 பேர் வந்திருந்தனர்.
Neet Exam - UG Row | நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை! அது முழு தேர்வையும் பாதித்ததா? NTA-வுக்கு SC கேள்வி!

ஏற்கனவே 2023ஆம் ஆண்டு இத்தேர்வில் மோசடி செய்த சிலர் பிடிபட்ட நிலையில், அதன் பின்னர் தேர்வர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர். எனவே, தேர்வர்களுக்கு விழிப்புடன் வழக்கமான சோதனை நடைபெற்றது. இதில் ஒருசிலரின் கைரேகை மற்றும் புகைப்படம், எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் கைரேகைக்கும் மாறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வந்திருந்தவர்களில் 8 பேர் ஆள்மாற்றட்டம் செய்துள்ளதை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.

இது தொடர்பாக, வன மரபியல் மற்றும் இனம் பெருக்கம் நிறுவனத்தின் இயக்குநர் அளித்த புகாரில், கோவை காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம் செய்ததாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரிஷி குமார், பிபன் குமார், பிரசாந்த் சிங், நரேந்திர குமார், ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா, அசோக் குமார் மீனா, ஹரியானாவை சேர்ந்த சுபம், பிஹாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட கும்பல், தேர்வர்களிடம் ஒரு தேர்வுக்கு ரூ. 5 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்டவர்கள், மத்திய இந்தியாவில் தேர்வு மோசடி செய்யும் நெட்வொர்க்கை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

மத்திய அரசு தேர்வில் வட மாநில கும்பல் ஆள்மாறாட்டம் செய்துள்ள விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்யும் வட மாநில கும்பலை முற்றிலுமாக பிடிக்க திட்டமிட்டுள்ள போலீசார், இதன் பின்னணி குறித்து துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியத் தேர்வு முறையே ஒரு மோசடி என்று விமர்சித்த ராகுல்காந்தி.. மத்திய அமைச்சர் கொடுத்த பதிலடி..