இந்தியத் தேர்வு முறையே ஒரு மோசடி என்று விமர்சித்த ராகுல்காந்தி.. மத்திய அமைச்சர் கொடுத்த பதிலடி..

இன்று மக்களவையில் இந்திய தேர்வு முறையை மோசடி முறை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதற்கு பதிலளித்தார்.

Parliament session : Rahul Gandhi Terms Indian Examninations System is a Fraud Minister Responds Rya

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் முதல் ரயில்வே பாதுகாப்பு வரையிலான பிரச்சனைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதை தொடர்ந்து நாளை 2024-25-ம் ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள், நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் குறித்தும் நாட்டில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நீட் தேர்வுத்தாள் கசிவு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது “ நமது தேர்வு முறையில் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது. இது நீட் தேர்வின் கேள்வி மட்டுமல்ல, எல்லா முக்கிய தேர்வுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது.

Neet ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது PM Modi பதில் அளித்திருக்க வேண்டும்! - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்

தற்போது கல்வி அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இந்தியத் தேர்வு முறை ஒரு மோசடி முறை என்று இந்த நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். நீங்கள் பணக்காரராக இருந்தால், நீங்கள் இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்று மில்லியன் கணக்கான மக்கள் நம்புகிறார்கள், எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கும் இதே உணர்வு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் மத்திய கல்வி அமைச்சரிடம் சில கேள்விகளை முன் வைக்கிறோம். தேர்வுமுறை ஒரு முறையான சிக்கலாக இருப்பதால், முறையான அளவில் சிக்கலை சரிசெய்ய நீங்கள் சரியாக என்ன செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

 

அப்போது பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் " மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் யாருடைய உளவுத்துறை சான்றிதழும் எனக்கு தேவையில்ல. நீங்கள் கூச்சலிடுவதல் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் தேர்வு முறையை மோசடி என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது துரதிர்ஷ்வசமான ஒன்று.  இதை நான் கண்டிக்கிறேன்." என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்..

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில், தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நீட் விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 240 க்கும் மேற்பட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்." என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios