எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்..

நாட்டின் நலனுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்து கட்சி வேறுபாடுகளை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Parliament Monsoon Session Pm Modi Appeals opposition to collabrate for country Rya

2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நாடு முழுவதும் இதை பார்த்து கொண்டிருக்கிறது. இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும்..

60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அரசு, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரியது... எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது வளர்ந்த பாரதம் கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும்.. அமுத காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். 

80 முறைக்கு மேல் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்திய காங்கிரஸ்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் சாடல்

ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.

ஜனவரியில் இருந்து இன்று வரை எவ்வளவோ போராடினோம், ஆனால் தற்போது அந்த காலம் முடிந்துவிட்டது. பொதுமக்கள் தங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் நாட்டை மேம்படுத்துவதில் அனைத்து எம்.பிக்களும் ஒன்றினைந்து பங்கேற்க வேண்டும். 2029-ல் தேர்தல் நடக்கும் போது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தலாம். தற்போது மக்களின் நலனே முக்கியம். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான 14 வயது சிறுவன்.. கேரளாவில் அதிர்ச்சி.. உஷார் நிலையில் அரசு!

எதிர்மறை அரசியல் செய்வதாக சில கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி, தங்கள் தோல்விகளை மறைக்க சிலர் நாடாளுமன்ற நேரத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். கடந்த அமர்வில் தம்மை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க முயன்றதாகவும், ஜனநாயகத்தில் இதுபோன்ற தந்திரங்களுக்கு இடமில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios