80 முறைக்கு மேல் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்திய காங்கிரஸ்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் சாடல்
நேரு முதல் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 80 முறைக்கு மேல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
நேரு முதல் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 80 முறைக்கு மேல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலைக் காட்டி தொடர்ந்து, பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அதனை எதிர்த்து பாஜகவினர் பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள்.
2024-25ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை டூ ஷீரடி ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ்! சாய் பாபாவை தரிசிக்க ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கும் ரயில்வே!!
"...காங்கிரஸ் அவ்வப்போது அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியுள்ளது. எமர்ஜென்சியை அமல்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சாமானியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அது சுதந்திர இந்தியாவின் இருண்ட காலகட்டம். நேரு, இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை காங். ஆட்சியில் 80 முறைக்கு மேல் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன" என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. 18வது மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இதுவாகும். முதல் கூட்டத்தொடரில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் மக்களவை சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒடுக்கமான மிகச் சிறிய அறைக்கு ரூ.500 வாடகை! கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலை!