இந்திய ரயில்வேயின் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) சென்னையிலிருந்து ஷீரடிக்குச் செல்ல ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை மிகவும் குறைவான கட்டணத்தில் வழங்குகிறது.

இந்திய ரயில்வேயின் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்காக ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜில் சென்னையிலிருந்து ஷீரடிக்கு வசதியாகப் பயணிக்கலாம். நன்கு திட்டமிடப்பட்ட இந்தச் சுற்றுலா பேக்கேஜ் ஷீரடிக்கு அமைதியான ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள சிறந்த வாய்ப்பைத் தருகிறது.

சாய் பாபா பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சுற்றுலா பேக்கேஜ் மிகவும் வசதியாக இருக்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. கருதுகிறது. 3 இரவுகள் மற்றும் 4 நாட்கள் நீடிக்கும் இந்த ரயில் பயணத்தில் சென்னை, ஜோலார்பேட்டை, காட்பாடியில் இருந்து புக் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு புதன்கிழமையும் ஷீரடிக்கு இந்த சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதன்படி, வரும் ஜூலை 24ஆம் தேதி இந்த ரயில் சென்னையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்படும். இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கு எக்கச்செக்க வட்டி! முதுமையில் அதிக வருவாய்க்கு கேரண்டி கொடுக்கும் திட்டங்கள்!

புறப்படும் ரயில் நிலையங்களில் இருந்து ஷீரடிக்கு வசதியான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் பயணத்திற்கான சாலை போக்குவரத்து சேவைகள், தனியார் வண்டி வசதிகள், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கான பயணக் காப்பீடு ஆகியவை இந்தப் பேக்கேஜில் அடங்கும்.

புனித நகரமான ஷீரடிச் செல்லும் இந்தப் பயணம் மறக்கமுடியாத வகையில் இருப்பதை ரயில்வே உறுதி செய்கிறது. வரும் ஜூலை 24ஆம் தேதி புறப்படும் ரயிலில் ஷீரடி செல்ல ஆர்வமுள்ள பயணிகள் இப்போதே உடனே செய்துள்ளலாம். இந்த மலிவு விலை பயணப் பேக்கேஜைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் வெறும் ரூ.3450 இல் இருந்து கிடைக்கிறது. சிறப்பான பயண அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த பேக்கேஜ் மூலம் டிக்கெட் முன்பதிவுகள் செய்வது குறித்த கூடுதல் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது ஐஆர்சிடிசியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Google Backup: கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை முழுமையாக பேக்அப் எடுப்பது எப்படி?