சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில், விலை உயர்ந்த கிரீன் கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Cannabis in the Medical College hostel: சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விடுதி, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ளது. இங்கு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். மருத்துவ மாணவர்களின் விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மாணவர்களின் அறைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக விடுதியின் டவர் 3-ல் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர்கள் மூவரின் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், 150 கிராம் கஞ்சா, கேட்டமைன் ஊசி வடிவில் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். சில பயிற்சி மருத்துவர்கள் கூட்டாக இதை பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் பயிற்சி மருத்துவர்கள் ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய மூவரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

அரசு பள்ளி வகுப்பறையில் கஞ்சா புதைத்த மாணவன்! தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ரொம்ப ஆபத்து! அலறும் அன்புமணி!

பயிற்சி மருத்துவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோட்டூர்புரம் பகுதியில் இருந்து கஞ்சா வழங்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து, 1 கிலோ 400 கிராம் கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான ரோட்னி ரோட்டரிக்கோவுக்கு கஞ்சா எங்கு வருகிறது? பின்னணியில் உள்ள நெட்ஒர்க் எது? என்பது உள்ளிட்ட விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். 

சென்னையின் பிரபல கல்லூரி விடுதியில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கைதான போதைப் பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு