நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்த நிலையில் அதில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
Sanjjanaa Galrani : கன்னட திரைப்பட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்தது. வழக்கில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறிந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.
இதனை தொடர்ந்தே நடிகை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சஞ்சனா கல்ராணி 5 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பின் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
போதைப்பொருள் வழக்கு
பெங்களூரு போலீஸின் கீழ் உள்ள மத்திய குற்றப்பிரிவு சஞ்சனாவை கைது செய்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடிகைக்கு ஜாமீன் கிடைத்தது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சஞ்சனா போதைப்பொருள் விநியோகம் செய்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சனாவுடன் நடிகை ராகினி திவேதி, மலையாளி நியாஸ் முகமது, நைஜீரிய வம்சாவளியினர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ராகினி திவேதியை கடந்த மாதம் உயர் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
இதையும் படியுங்கள்... Sanjjanaa Galrani : கர்ப்பமாக இருக்கும் நடிகைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரபலத்தின் மகன் கைது

சஞ்சனா கல்ராணி சிக்கியது எப்படி?
2020 செப்டம்பர் 8ஆம் தேதி சஞ்சனாவின் வீட்டில் சோதனை நடத்திய பிறகு நடிகை கைது செய்யப்பட்டார். போதை விருந்துகளை ஏற்பாடு செய்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராகுல் ஷெட்டியிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சஞ்சனா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சனா கல்ராணி கன்னடம் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் பல படங்களில் நடித்துள்ள தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆவார்.
நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா
கசாநோவா, தி கிங் அண்ட் கமிஷனர் ஆகியவை அவர் நடித்த மலையாள திரைப்படங்கள். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமாவார். 2006ஆம் ஆண்டு ஒரு கதா செய்வார் என்ற தமிழ் படத்தின் மூலம் சஞ்சனா கல்ராணி சினிமாவுக்குள் நுழைந்தார். 2006ஆம் ஆண்டில் ஹண்ட ஹெண்டதி என்ற படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இந்தி திரைப்படமான மர்டரின் ரீமேக் ஆகும். இதில் இடம்பெற்ற கவர்ச்சி காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையும் படியுங்கள்... பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு மாடல் அழகியை தாக்கிய சஞ்சனா கல்ராணி..! அதிரடி வழக்கு பதிவு..!
