Asianet News TamilAsianet News Tamil

விஷ்ணுவிஷாலின் எமோஷ்னல் திரில்லர்..! 'மோகன்தாஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 

vishnu vishal acting mohandoss movie shooting started
Author
Chennai, First Published Mar 5, 2021, 12:13 PM IST

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

vishnu vishal acting mohandoss movie shooting started

மேலும் செய்திகள்: அழுக்கு சட்டை... சோடாபுட்டி கண்ணாடி..! கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் செல்வராகவன்! வேற லெவல் போஸ்டர்!
 

'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்தது.

vishnu vishal acting mohandoss movie shooting started

'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்: விஜய் டிவியின் தங்க தாமரை... தொகுப்பாளினி பிரியங்காவா இது.. ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வேற லெவல் போட்டோஸ்
 

vishnu vishal acting mohandoss movie shooting started

மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' பட்ரோஸ் ரோஷினியா இது? நடிகைகளை மிஞ்சிய அழகில் கொடுத்த விதவிதமான போஸ்!
 

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'மோகன் தாஸ்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார்  முரளி கார்த்திக்.

Follow Us:
Download App:
  • android
  • ios