அழுக்கு சட்டை... சோடாபுட்டி கண்ணாடி..! கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் செல்வராகவன்! வேற லெவல் போஸ்டர்!
இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'சாணிக்காகிதம்'. இந்த படத்தில் இருந்து செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தையே மிரட்டி வருகிறது.
இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'சாணிக்காகிதம்'. இந்த படத்தில் இருந்து செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தையே மிரட்டி வருகிறது.
வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ஆகியோரை வைத்து ராக்கி என்ற படத்தை இயக்கிவரும், அருண் மாதேஸ்வரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வெளியாகும் முன்பே, 'சாணிக்காகிதம்' படத்தையும் பிசியாக இயக்கி வருகிறார். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
ஹீரோயினிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும், படங்களை தேர்வு செய்து நடித்து வரும், நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், அழுக்கு சட்டை, சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, ஒரு கையில் பீடி, மற்றொரு கையில் துப்பாக்கி என மிரட்டுகிறார் செல்வராகவன்.
அவரது பக்கத்தில் ஆண் நபர் ஒருவர், ரத்த கரையுடன் பெஞ்சில் படுத்துள்ளார்... பார்க்கவே திகிலூட்டும் இந்த, போஸ்டர் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் செல்வராகவனுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.