Asianet News TamilAsianet News Tamil

மனைவி - மகள் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து கூறிய விராட் கோலி!

மார்ச் 8ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண்மையை போற்றும் விதத்தில், பிரபலங்கள் பலர் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

virat kohli say womens day wishes for wife and daughter
Author
Chennai, First Published Mar 8, 2021, 2:36 PM IST

மார்ச் 8ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண்மையை போற்றும் விதத்தில், பிரபலங்கள் பலர் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பெண்கள் இருக்கும் இடத்தில் மேஜிக் உள்ளது... ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய பெண்கள் தின வாழ்த்து..!
 

பிரபல முன்னணி நட்சத்திர ஜோடிகள் ஒன்று அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி ஜோடி.  பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சில வெப் தொடர்களை தயாரித்தும் வருகிறார்.

virat kohli say womens day wishes for wife and daughter

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த அனுஷ்கா சர்மாவுக்கு, சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர், இந்த நட்சத்திர ஜோடி.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்!
 

virat kohli say womens day wishes for wife and daughter

இதுகுறித்து அவர் கூறியதாவது, குழந்தை பிறப்பு என்பதை பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டை குளிர்விப்பது போன்றது. நம்ப முடியாத மற்றொரு ஆச்சரியமான அனுபவம் ஆகும். அதனை பார்த்த பிறகு பெண்களின் உண்மையான வலிமையையும், தெய்வீகத்தன்மையையும்,  கடவுள் அவர்களுக்கு ஏன் ஒரு உயிரை படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்களை விட மிகவும் வலிமையானவர்கள். என் வாழ்க்கையில் மிகவும் சக்தி மிக்க, இரக்கமுள்ள மற்றும் வலிமைமையான பெண்ணுக்கும், தனது தாயை போல வளர போகிறவளுக்கும் அற்புதமான மகளிர் தினம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

 

Follow Us:
Download App:
  • android
  • ios