- Home
- Astrology
- செவ்வாய் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
செவ்வாய் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Sevvai Peyarchi 2026: செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி நீச்சம் பெறுவதால் 3 ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை என்னென்ன ராசிகள்? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

செவ்வாய் பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகப் போற்றப்படும் செவ்வாய் பகவான், தைரியம், வீரம், நிலம் மற்றும் ஆற்றலின் காரணியாகத் திகழ்கிறார். இவர் தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று சந்திரன் ஆளும் கடக ராசிக்குப் பெயர்ச்சியாக உள்ளார். நவம்பர் 12 ஆம் தேதி வரை கடக ராசியில் தொடரும் செவ்வாயின் இந்தப் பயணம், ஜோதிடக் கணக்கீட்டின்படி இங்குக் நீச்சம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரனின் இயல்புகள் முற்றிலும் மாறுபட்டவை என்பதால், இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக கடகம், துலாம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கால கட்டமாகும். இவர்களின் தற்போதைய நிலை மற்றும் இதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு (ஜென்ம ராசி) செவ்வாய் நுழைவதால், இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பணியிடத்தில் மறைமுக எதிரிகளால் சிறு சங்கடங்கள் தலைதூக்கலாம். எத்தகைய பணிகளையும் மிகுந்த பொறுப்புடனும் கவனமாகவும் கையாள்வது அவசியமாகும். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்து, உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். பொருளாதார ரீதியிலும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழதோறும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று சிவப்பு நிற மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம்.
ஏழை எளிய முதியவர்களுக்கு உங்களால் இயன்ற துவரம் பருப்பு அல்லது சிகப்பு நிற தானியங்களைத் தானமாக வழங்குவது மன அமைதியைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கவுள்ளார். தொழில் மற்றும் உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் நீச்சம் பெறுவதால், அலுவலகத்தில் மேலதிகாரிகளுடனோ அல்லது சக பணியாளர்களுடனோ வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவது லாபகரமானது. எவ்விதமான ரிஸ்க் ஆன முதலீடுகளையும் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி பாராயணம் செய்வது உத்தியோகத்தில் உள்ள தடைகளை நீக்கும்.
தினசரி பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த உணவு வழங்குவது சிறப்பான பலன்களை அளிக்கும்.
மகரம்
மகர ராசிக்கு 7 ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால், குடும்ப வாழ்க்கையிலும் தொழில் கூட்டாண்மையிலும் சிறு சவால்களைச் சந்திக்க நேரிடும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தன்னம்பிக்கையைக் கைவிடாமல் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், யாரிடம் பேசும்போதும் வார்த்தைகளில் கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாட்டை மேற்கொள்வதுடன், ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
செவ்வாய் தோஷம் விலக ஹனுமான் பாராயணம் செய்வது மன வலிமையையும் தெளிவையும் தருவதோடு பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

