MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Ragi recipes: கேழ்வரகில் கூழ் மட்டும் இல்லை! இடியாப்பம் முதல் லட்டு வரை செய்யக்கூடிய 7 சத்தான உணவுகள்

Ragi recipes: கேழ்வரகில் கூழ் மட்டும் இல்லை! இடியாப்பம் முதல் லட்டு வரை செய்யக்கூடிய 7 சத்தான உணவுகள்

Ragi recipes: கேழ்வரகு கூழ் மட்டுமல்லாமல், அதை வைத்து இடியாப்பம், அடை, தோசை, இட்லி, ரொட்டி, உப்புமா, லட்டு என பல சுவையான உணவுகளை தயாரிக்கலாம். கேழ்வரகை தினசரி உணவில் சுவையாக சேர்க்க உதவும் 7 விதமான உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Sep 10 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கேழ்வரகு உணவுகள்
Image Credit : pinterest

கேழ்வரகு உணவுகள்

கேழ்வரகு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கூழ்தான். குறிப்பாக கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவாக கேழ்வரகு கூழ் பல வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் கொண்ட இந்த சிறுதானியத்தை வைத்து கூழ் மட்டுமின்றி, தினசரி உணவில் சேர்க்கக்கூடிய பல சுவையான உணவுகளையும் தயாரிக்கலாம்

காலை உணவு முதல் சிற்றுண்டி வரை கேழ்வரகை பல்வேறு வகைகளில் பயன்படுத்த முடியும். அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் கேழ்வரகை வைத்து வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய 7 சத்தான கேழ்வரகு உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
கேழ்வரகு அடை
Image Credit : pinterest

கேழ்வரகு அடை

கேழ்வரகு மாவுடன் வெங்காயம், கேரட், முருங்கைக்கீரை அல்லது கொத்தமல்லி போன்ற காய்கறி மற்றும் கீரைகளை சேர்த்து அடை தயாரிக்கலாம். சிறிது பருப்பு வகைகளை சேர்த்தால் சுவையும், ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். காலை அல்லது இரவு உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

38
கேழ்வரகு தோசை
Image Credit : pinterest

கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவை அரிசி, உளுந்து போன்றவற்றுடன் சேர்த்து தோசை மாவாக தயாரிக்கலாம். வழக்கமான தோசைக்கு மாற்றாக இதை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிட்ட்டால் மொறுமொறுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

48
கேழ்வரகு இட்லி
Image Credit : pinterest

கேழ்வரகு இட்லி

இட்லி மாவில் கேழ்வரகை சேர்த்து ஆவியில் வேகவைத்து கேழ்வரகு இட்லி செய்யலாம். வழக்கமான காலை உணவில் சிறுதானியத்தை சேர்க்க விரும்புபவர்களுக்கு இது எளிய வழியாக இருக்கும்.

58
கேழ்வரகு ரொட்டி
Image Credit : pinterest

கேழ்வரகு ரொட்டி

கேழ்வரகு மாவில் வெங்காயம், கீரை, காய்கறிகள் மற்றும் தேவையான மசாலா சேர்த்து தண்ணீர் கலந்து பிசைந்து ரொட்டி தயாரிக்கலாம். இது சப்பாத்திக்கு மாற்றாக மதிய அல்லது இரவு உணவில் இடம்பெறலாம்

68
கேழ்வரகு கஞ்சி
Image Credit : pinterest

கேழ்வரகு கஞ்சி

கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து கஞ்சி தயாரிக்கலாம். இதனை காரமாகவும், தேவைக்கேற்ப இனிப்பாகவும் செய்ய முடியும். பால் அல்லது மோர் போன்றவற்றுடன் சேர்த்து தயாரிக்கும் முறைகளும் உள்ளன.சேர்க்கப்படும் பொருட்களின் அடிப்படையில் அதன் கலோரி மற்றும் ஊட்டச்சத்து அளவு மாறுபடும்.

78
கேழ்வரகு லட்டு
Image Credit : pinterest

கேழ்வரகு லட்டு

கேழ்வரகு மாவை நன்றாக வறுத்து, வெல்லம் மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து லட்டு தயாரிக்கலாம். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

88
கேழ்வரகு இடியாப்பம்
Image Credit : pinterest

கேழ்வரகு இடியாப்பம்

கேழ்வரகு மாவை வெந்நீரில் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவைத்தால் சுவையான கேழ்வரகு இடியாப்பம் தயார். இதனை தேங்காய்ப்பால், காய்கறி குருமா அல்லது சாம்பார் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

கூழாக மட்டுமே சாப்பிட வேண்டாம்!

கேழ்வரகை ஒரே விதமாக கூழாக மட்டுமே சாப்பிடாமல், அடை, தோசை, இட்லி, ரொட்டி, உப்புமா, கஞ்சி, லட்டு என வெவ்வேறு உணவுகளாக மாற்றி சாப்பிடலாம். இதனால் உணவில் பல்வேறு சுவைகளையும், சிறுதானிய வகைகளையும் சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அதேநேரத்தில், கேழ்வரகு சத்தான உணவாக இருந்தாலும், எந்த ஒரு உணவையும் மட்டும் அதிகமாக நம்பாமல், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பிற தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை உள்ளடக்கிய சமநிலையான உணவுமுறையை பின்பற்றுவது முக்கியம்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg Yolk Benefits: முட்டையோட மஞ்சள் கருவை தூக்கி போடுறீங்களா? இவ்வளவு சத்துகளை மிஸ் பண்றீங்க!
Recommended image2
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Recommended image3
செட்டிநாடு டூ ஆந்திரா ஸ்டைல்... 5 காரசார சிக்கன் ரெசிபி; சாதம், பரோட்டா, சப்பாத்திக்கு செம காம்போ!
Related Stories
Recommended image1
Instant Idli Recipe: இனி இட்லி மாவுக்கு மணிக்கணக்கா வெயிட் பண்ண வேண்டாம்! 15 நிமிஷத்துல ராகி இட்லி ரெடி!
Recommended image2
Ragi Idli: இனி மாவு அரைக்க வேண்டாம்! 15 நிமிஷத்துல சூப்பர் ஹெல்தி ராகி இட்லி ரெடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved