Asianet News TamilAsianet News Tamil

பற்றி எரியும் தீபிகா படுகோன் கவர்ச்சி காவி உடை சர்ச்சை..! நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் நடிகர்..!

நடிகை தீபிகா படுகோன், காவி நிற கவர்ச்சி உடையில் 'பதான்' பட பாடலில் தோன்றியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பிரபல தமிழ் நடிகர் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Prakashraj supports Deepika Padukone on kavvi dress controversy
Author
First Published Dec 16, 2022, 3:51 PM IST

பாலிவுட் திரையுலகின் கிங் காங், நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள 'பதான்' திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின், பிரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வரும் நிலையில்...  சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்தப் பாடலில், திருமணத்திற்கு பிறகும் எல்லை கடந்த கவர்ச்சியில், படு கிளாமராக நடிகர் ஷாருக்கானுடன் ரொமான்ஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் தீபிகா படுகோன். மேலும் இந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் காவி நிற கவர்ச்சி உடை அணிந்து தீபிகா படுகோன் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Prakashraj supports Deepika Padukone on kavvi dress controversy

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பெற்றோராகும் அட்லீ - பிரியா ஜோடி! கர்ப்பமான வயிறுடன் வெளியான புகைப்படம் வைரல்!

தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடை அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும் இந்த பாடலின் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.  மேலும் சிலர் இந்த பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

Prakashraj supports Deepika Padukone on kavvi dress controversy

இது குறித்து அவர் போட்டுள்ள ட்விட்டர்  பதிவில், காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை வன்புணர்வு  செய்யலாம், அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கலாம், ஆனால் காவி நிறத்தில் உடை அணிந்து நடிப்பது மட்டும் தவறா என்பது போல் கேள்வி எழுப்பி தீபிகா படுகோனுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு, சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிலர் தங்களின் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். தீபிகா படுகோனின் காவி உடை பிரச்சனை ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் நடிகர் ஒருவர் இவருக்கு ஆதரவாக பேசியுள்ளது மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios