Child Death: வேலூரில் வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி; தன்னிச்சையாக நடை பழகியபோது நிகழ்ந்த சோகம்
வேலூரில் வீட்டில் முதல் முறையாக நடப்பதற்கு முயற்சித்த 14 மாத குழந்தை பரிதாபமாக வாளியில் தலைகீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்த ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு 14 மாதத்தில் சகிதா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சம்பவத்தின் போது துர்கா வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
மேலும் வீட்டினுள் அமைந்துள்ள குளியல் அறையின் கதவு மூடப்படாத நிலையில் குழந்தை தவழ்ந்தபடி குளியல் அறைக்கு சென்ற நிலையில், அங்கு வாளியை பிடித்து எழுந்து நிற்க முயற்சித்துள்ளது. மேலும் வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை ஆனந்தமாக விளையாடியுள்ளது. ஒரு கட்டத்தில் குழந்தை தலைகீழாக வாளியினுள் கவிழந்து விழுந்துள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் விளையாடிய 5 பயிற்சி மருத்துவர்கள் பலி; அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் ஆவேசம்
துர்கா தனது சமையல் பணிகளை முடித்துக் கொண்டு குழந்தையை காணவில்லை என தேடியபோது வாளியில் தலைகீழாக குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தூக்கி பார்த்துள்ளார். குழந்தை மூச்சு பேச்சற்ற நிலையில் இருந்ததையடுத்து அலறி துடித்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை அருகில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வேலூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளியில் மூழ்கி பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.