MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பெற்றோராகும் அட்லீ - பிரியா ஜோடி! கர்ப்பமான வயிறுடன் வெளியான புகைப்படம் வைரல்!

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பெற்றோராகும் அட்லீ - பிரியா ஜோடி! கர்ப்பமான வயிறுடன் வெளியான புகைப்படம் வைரல்!

இயக்குனர் அட்லீ மற்றும் நடிகை பிரியா தம்பதிக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், திருமணமான 8 ஆண்டுகளுக்கு பின், கர்ப்பமாக உள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 16 2022, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.  அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ,  ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். 
 

27

இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. 

முதலில் கண்ணம்மா இப்போ பாரதி.. கையில் பையோடு தெருத்தெருவாய் சுற்றி குடும்பத்தை கண்டு பிடித்தாரா? லேட்டஸ்ட் அப
 

37

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.
 

47

இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

தனுஷ் பட இளம் இயக்குனருடன் 'ராஜா ராணி' பட நடிகை தன்யா ரகசிய திருமணம்! நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 

57

இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர். 
 

67

பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில்,  இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.  எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என் கூறி இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வேண்டிக்கொள்ளுங்கள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சகோதரருக்காக நடிகை குஷ்பு வேண்டுகோள்!
 

77

மேலும் "சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம். " - அட்லீ & பிரியா அட்லீ என்கிற பதிவையும் போட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Recommended image3
ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved