தமிழ் சினிமாவின், இளம் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் நகுல் தற்போது வெற்றி படத்தை கொடுக்க போராடி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் நடிக்க உள்ள படத்தில், நடிப்பை தாண்டி பாடலிலும் கலக்கியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நகுல் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான 'அந்நியன், சூர்யா நடித்த 'கஜினி, கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு, சிம்புவின் 'வல்லவன் போன்ற பல திரைப்படங்களில் பாடியுள்ளார். நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய பின்னரும் இவர் நடிக்கும் படங்களில் சில பாடல்களை பாடி வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ப்ரிஸ்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடிகர் நகுல் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சதுஷன் இப்படத்தை இயக்குகிறார். அஷ்வத் இப்படத்தின் இசையமைத்து வருகிறார். 

நடிகர் நகுல் ஏற்கனவே இசையில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான். தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதிற்கு இணங்க அவர், இப்பாடலை பாடியுள்ளார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.