மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை.. அவரின் 2 மனைவிகள் யார் தெரியுமா?
மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. செப்சிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மதியம் காலமானார். அவரின் மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1970களில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. எனினும் தமிழில் இவர் நடித்த நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார். மேலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : கமல் முதல் அப்பாஸ் வரை.. சிம்ரனை காதலித்து கைவிட்ட ஹீரோஸ் - நடிகையின் சர்ச்சைக்குரிய லவ் லைஃப் பற்றி தெரியுமா?
குறிப்பாக நடிகர் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த படங்கள் இன்றளவும் பலரின் ஃபேவரைட் படங்களாக உள்ளன. அதற்கு உதாரணமாக முத்து, அண்ணாமலை போன்ற பிளாக் பஸ்டர் படங்களை உதாரணமாக சொல்லலாம்.
சரத்பாபுவின் திருமண வாழ்க்கை : நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 1971-ல் திருமணம் செய்து கொண்டது. எனினும் 1988-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் சரத்பாபு, எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை நடிகர் சரத்பாபு திருமணம் செய்து கொண்டார். 1990- ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 2011-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.
எனினும் தனது திருமணம் குறித்து பேசிய சரத் பாபு தான் முதலில் திருமணம் செய்துகொண்டது ஸ்னேகலதாவை தான் என்று கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ தமிழ் நடிகர் எம்.என். நம்பியாரின் மகளான சினேகலதா என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தேன். ஆனால் ரமா பிரபா என்பவரை நான் திருமணம் செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : செப்சிஸ் நோய் பாதிப்பு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு-
- Actor Sarath Babu
- Actor Sarath Babu first marriage
- Actor Sarath Babu Divorced
- Actor Sarath Babu First Wife
- Actor Sarath Babu Marriage Life
- Actor Sarath Babu Second Wife
- Actor Sarath Babu death
- Rama Prabha
- Secret of Sarath Babu Marriage Life
- Snehalatha
- daughter of Tamil actor MN Nambiar
- Actor Sarath Babu Movies