MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா

ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா

நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு - சூப்பர்ஸ்டார் இடையேயான நட்பை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 22 2023, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆந்திராவில் பிறந்தவர் சரத்பாபு. இவரது இயற்பெயர் சத்யம் பாபு. தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினத்தில் பிரவேசம் தான். இப்படத்தின் போது தான் பாலச்சந்தர் சத்யம் பாபுவுக்கு சரத் பாபு என பெயரிட்டார். அந்த பெயர் தான் தற்போது அவருக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிகர் சரத்பாபு - ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் சேர்ந்தாலே அந்த படம் ஹிட் என சொல்லும் அளவுக்கு சக்சஸ்புல் நடிகர்களாக இருவரும் வலம் வந்தனர். ரஜினியும் சரத் பாபுவும் முதன்முதலாக இணைந்த திரைப்படம் முள்ளும் மலரும். மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தில் இடம்பெறும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்கிற பாடலை அனுபவித்து பாடியபடி இவர் ஜீப் ஓட்டி வரும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதையடுத்து ரஜினியுடன் நெற்றிக்கண், வேலைக்காரன் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சரத்பாபு, கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நெருங்கிய நண்பனாக நடித்து, பின்னர் வில்லனாக மாறி மிரட்டி இருப்பார்.

35

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்தில் ரஜினி - சரத்பாபு இடையே நடக்கும் வார்த்தை மோதலை செம்ம மாஸாக காட்சி படுத்தி இருப்பார்கள். அந்த காட்சியை இன்று பார்த்தால் கூட புல்லரிக்கும். அந்தளவுக்கு இருவரும் போட்டிபோட்டு நடித்திருப்பார்கள். அண்ணாமலை படம் வெற்றியடைந்ததற்கு ரஜினி - சரத்பாபு காம்போவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும் ஒரு காரணம்.

இதையும் படியுங்கள்... Sarath Babu Passed Away : செப்சிஸ் நோய் பாதிப்பு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு

45

அண்ணாமலை திரைப்படத்துக்கு முன்னர் வரை ரஜினியை படத்தில் யாராவது அடித்தாலோ, அவருடன் சண்டை போட்டாலோ, சம்மந்தப்பட்ட வில்லன் நடிகரின் வீட்டின் முன் ரஜினி ரசிகர்கள் குவிந்து ரகளை செய்த சம்பவங்களும் அரங்கேறின. ஆனால் அத்தகைய பிரச்சனையெல்லாம் எதிர்கொள்ளாத ஒரே நடிகர் சரத்பாபு தானாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

55

அண்ணாமலைக்கு அடுத்தபடியாக முத்து படத்தில் ரஜினியின் எஜமானாக நடித்திருந்தார் சரத்பாபு. அந்த கேரக்டருக்கு இவரை விட யாரும் கச்சிதமாக பொருந்தி இருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு நடித்திருப்பார் சரத்பாபு. அப்படத்திலும் எஜமான்... எஜமான் என தன் காலையே சுற்றி வரும் ரஜினியுடன் சேர்ந்து சரத்பாபு செய்த காமெடி அலப்பறைகள் மக்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டன. அப்படமும் இவர்கள் இருவரது கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

முத்து படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் நட்புக்காகவே சரத்பாபு அவர் தயாரித்த பாபா படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்துள்ளார். ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் சரத்பாபுவும் ஒருவர். இவர்கள் இருவரும் சினிமாவை போல் ரியல் லைஃபிலும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை.. அவரின் 2 மனைவிகள் யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(5.4 ov)39/1
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(75.5 ov)272/1
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved