கமல் முதல் அப்பாஸ் வரை.. சிம்ரனை காதலித்து கைவிட்ட ஹீரோஸ் - நடிகையின் சர்ச்சைக்குரிய லவ் லைஃப் பற்றி தெரியுமா?
தமிழ் திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரனின் காதல் பற்றியும், அவை தோல்வியில் முடிந்தது பற்றியும் பிரபல பத்திரிகையாளர் பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவருக்கு தற்போது திருமணமாகி குழந்தையும் உள்ளது. தற்போது சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் சிம்ரன், வில்லியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் சிம்ரன், தன்னுடைய இளமை காலத்தில் பல்வேறு காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அவர் எந்தெந்த நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி உள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது : “இப்போ நயன்தாரா எப்படியோ அந்த மாதிரி தான் சிம்ரன் அந்த சமயத்தில் இருந்தார். எல்லோரையும் ஈஸியா நம்பி விடுவார். சிம்ரன், நடிகர் அப்பாஸை தான் முதன்முதலில் காதலித்ததாக சொல்லப்பட்டது. அவர்கள் இருவர் குறித்த காதல் கிசுகிசுக்கள் அதிகளவில் வந்தன. இதற்கு காரணம் சிம்ரனும், அப்பாஸும் விஐபி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அப்பாஸ் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தார்.
சிம்ரனும், அப்பாஸும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றெல்லாம் அந்த சமயத்தில் தகவல் பரவியது. இதையடுத்து அப்பாஸின் நலம்விரும்பிகள், இது அவரது கெரியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியதால் சிம்ரன் உடனான காதலை முறித்துக் கொண்டார் நடிகர் அப்பாஸ். இதையடுத்து பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் சிம்ரன்.
இதையும் படியுங்கள்... புது பிசினஸ் தொடங்கினார் நடிகர் அஜித்... அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நீண்ட காலமாக இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. பின்னர் சிம்ரனுக்கு ஜோடியாக படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, அவருடன் கவர்ச்சி நடனமும் ஆடி இருந்தார் சிம்ரன். அந்த சமயத்தில் பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்டதே அவரது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதால், மீண்டும் ஒரு காதல் திருமணம் வேண்டாம் என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜு சுந்தரம் சிம்ரன் உடனான காதலை முறித்துக் கொண்டார்.
இதையடுத்து சிம்ரன் உடன் அதிகளவில் கிசுகிசுக்கப்பட்டவர் என்றால் அது கமல்ஹாசன் தான். கமலுக்கு ஜோடியாக பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் சிம்ரன் நடித்திருந்தார். அந்த சமயத்தில் இருவரும் காதலித்து டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் அடிபட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது.
சிம்ரன் - கமல் இடையேயான காதலைப் பற்றி முன்னணி வார பத்திரிகை ஒன்று ஒரு பெரிய கவர் ஸ்டோரி எழுதியதை பார்த்து கடுப்பான கமல், ‘ஏண்டா என் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிறீங்க’ என சாடினார். ஆனால் கடைசி வரை தான் அதை செய்யவில்லை என்று கமல் சொல்லவே இல்லை. செய்ததை தான் நியாயப்படுத்தினார்” என செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படியுங்கள்... தாமதமாகும் STR 48 பட ஷூட்டிங்... புது அப்டேட் உடன் கமல்ஹாசனை சந்தித்த சிம்பு - வைரலாகும் போட்டோஸ்